Breaking News

மாகாண அரசின் தனிமைப்படுத்துதல் திட்டங்களில் மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை : குயின்ஸ்லாந்து ப்ரீமியர் Annastacia Palaszczuk குற்றச்சாட்டு

Queensland Premier Annastacia Palaszczuk accused of failing to focus on provincial isolation

மத்திய அரசு ‘செர்ரி பிக்கிங்’ எனப்படும் பலனளிக்கும் திட்டங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாகவும், மக்கள் நலன் சார்ந்த மாகாண தனிமைப்படுத்தும் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்காமல் விமர்சனங்களை புறந்தள்ளி வருவதாகவும் குயின்ஸ்லாந்து பிரீமியர் Annastacia Palaszczuk குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் Toowoomba பகுதியில் ஆயிரம் அறைகளுடன் கூடிய வெளிநாட்டு பயணிகளை தனிமைப்படுத்தும் மையத்தை அமைப்பதற்கான திட்டம் தொடங்கப்பட்ட தாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் இந்தத் திட்டம் செயல்படுத்த இயலாத ஒன்று என பிரதமர் மோரிசன் தெரிவித்திருந்தார் இந்நிலையில் அரசியல் முக்கியம் இல்லாததைப் பற்றி மத்திய அரசு வாதிட்டு வருவது குயன்ஸ்லாந்து மக்களை மிகுந்த அயற்சிக்கு உள்ளாக்குவதாக ப்ரீமியர் கூறியுள்ளார். இந்த தனிமைப்படுத்துதல் திட்டம் சிறப்பானது என்று குயின்ஸ்லாந்து மக்கள் தன்னிடம் கூறி வருவதாகவும் இதனை தெரிந்து கொள்ள பிரதமர் மக்களிடம் உரையாற்ற வேண்டும் என்றும் பிரிமியர் Annastacia Palaszczuk கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்திய அரசு விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தங்களது திட்டங்களை தொடர்ந்து முன் வைக்க வேண்டியது கடமை என்றும் பிரீமியர் கூறியுள்ளார். அதே நேரத்தில் மக்களின் தேவையும், பாதுகாப்பும் கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் திட்டங்கள் மீதான விமர்சனங்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெல்கேம்ப் விமானநிலையத்தில் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்திற்கான போதுமான விவரங்கள் ஏற்கனவே அரசுக்கு அளிக்கப்பட்டு விட்டதாகவும், இதன் மீதான நடவடிக்கையை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரிமியர் Annastacia Palaszczuk தெரிவித்துள்ளார்.

Scott Morrisonஇதனிடையே இந்த திட்டத்தில் உள்ள பல்வேறு பின்னடைவுகள் குறித்து பிரதமர் ஸ்காட் மோரிசன் பிரிஸ்பேனில் உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார். இந்தத் திட்டத்திற்கான மதிப்பீடு குறிப்பிடப்படவில்லை என்றும், இந்தத் திட்டத்தின் மூலம் யார் பலன் அடைவார்கள் என்றும், இதற்கு முன்னதாக செயல்படுத்தப்பட்ட திட்டத்திற்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்றும் பிரதமர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். ஆயிரம் அறைகளுடன் கூடிய ஒரு மையத்தை கட்டமைக்க பணியாளர்கள் எங்கிருந்து வருவார்கள் என்றும், தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் அமலில் உள்ள போது அவர்களை எப்படி அனுமதிக்க முடியும் என்றும் ஸ்காட் மோரிசன் கேள்வி எழுப்பியுள்ளார். போன்ற கேள்விகளை பல மாதங்களாக தாங்கள் கேட்டு வருவதாகவும், இதற்கு குயின்ஸ்லாந்து அரசு பதிலளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெல்கேம்ப் விமான நிலையத்தில் இருந்து பிரிஸ்பேனுக்கு சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3hFuMOk