Breaking News

குயின்ஸ்லாந்து காவல்துறையினர் தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயம் என்று காவல்துறை ஆணையர் கேத்ரீனா கேரோல் தெரிவித்துள்ளார்.

Queensland Police Commissioner Katrina Carroll has said it is mandatory to be vaccinated.

இது குறித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ள குயின்ஸ்லாந்து காவல்துறை ஆணையர் கேத்ரீனா கேரோல், முன்களப்பணியாளர்களாக உள்ள காவல் துறையினர் தினசரி ஏராளமானவர்களை சந்தித்து பேச வேண்டியிருப்பதாகவும், சமூகத்துடன் இணைந்து செயல்பட வேண்டிய கடமையுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Queensland Police Commissioner Katrina Carroll has said it is mandatory to be vaccinatedஇதனால் குயின்ஸ்லாந்து காவல்துறையில் பணிபுரியும் அனைத்து காவலர்களும், அதிகாரிகளும் அடுத்தாண்டு தொடக்கத்திற்குள் தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என்று காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். குயின்ஸ்லாந்து காவல்துறையில் பணியாற்றி வரும் நிலை 1 மற்றும் நிலை 2 பணியாளர்கள் அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் முதல் டோசையும், ஜனவர்23 ஆம் தேதிக்குள் 2 ஆம் டோஸ் தடுப்பூசியை செலுத்தியிருப்பது கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Queensland Police Commissioner Katrina Carroll has said it is mandatory to be vaccinated..சமூகத்தில் பெருவாரியான மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதே தற்போது கொரோனாவுக்கு எதிரான ஆயுதம் என்று காவல்துறை ஆணையர் விளக்கமளித்துள்ளார். தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியாதவர்கள், பணி நேரங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் பணிபுரியும் ஒரு சில காவலர்கள் , கட்டாய தடுப்பூசி என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Link Source: https://ab.co/3mZGwhd