Breaking News

குயின்ஸ்லாந்து எம்.பி George christensen வரும் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றும், இத்தேர்தலுக்கு பிறகு அரசியலை விட்டு விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

Queensland MP George Christensen has announced that he does not want to run in the upcoming election and will leave politics after the election.

‌இது குறித்து அவர் அளித்த பேட்டியில், வரும் தேர்தலில் மீண்டும் தான் போட்டியிடப்போவதில்லை என்றும், அரசியலில் இருந்து விலக இதுவே சரியான தருணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தான் மூன்று முறை மட்டுமே தேர்தல் களம் காணவிரும்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

‌42 வயதான George Christine, 2010 ஆம் ஆண்டு Dawson தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

Michael McCormackகிறிஸ்டின்சன் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள கட்சியின் தலைவர் Michael McCormack, கிறிஸ்டின்சனின் முடிவு குறித்து அவர் தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். ஒரு மிகச்சிறந்த போராளி என்றும், தன் தொகுதி மக்களுக்கு என்னற்ற நன்மைகளை அவர் செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.ஆனால் குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவிடவும், மேற்கொண்டு படிக்கவும் அவர் முடிவை எடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார். மிகவும் கடினமான முடிவாக இது இருக்கலாம் என்றும் Michael McCormack தெரிவித்துள்ளார்.

‌ஆஸ்திரேலிய அரசியல் தடம் மாறுவதாக குறிப்பிட்டுள்ள கிறிஸ்டின்சன், வரும் நாட்களில் மனம் திறந்து பேசப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
‌2014-2018 ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்த போது பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அரசு பயணம் மேற்கொண்டிருந்தார்.
அப்போது அரசு பணத்தில் ஆடம்பர காரில் பயணம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு 187 டாலர் திரும்ப பெறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Link Source: https://cutt.ly/Tv8V8Ed