Breaking News

இணையத்தளத்தில் நடந்த தவளை மோசடி..மாட்டிக்கொண்ட குயின்ஸ்லாந்து நபர் !

Queensland man sold frogs on online

Gold Coast மனிதர் ஒருவர் தனது கொல்லைப்புறத்திலிருந்து தவளையை எடுத்து ஆன்லைனில் விற்றதாக கூறப்படுகிறது. அதை அதிகாரிகள் அறிந்ததையடுத்து அவருக்கு $4401 அபராதம் விதிக்கப்பட்டது.இந்த சம்பவம் தற்போது இணையத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது.

Queensland man sold frogs on online 1இந்த மோசடி குறித்து Queensland சுற்றுச்சூழல் அதிகாரிகள் கூறும்பொழுது, அந்த தவளைகளை மீண்டும் காட்டுக்குள் விட்டு விட்டதாக கூறினார்கள். தவளைகளை பொழுதுபோக்கிற்காகவோ அல்லது வணிக நோக்கத்துடனோ வைத்திருக்க வேண்டும் என்றால் அதற்கு உரிமம் பெற வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.

மேலும் ,Queenslandல் வசிப்பவர்கள் விலங்குகளை வைத்திருப்பதற்கோக, இனப்பெருக்கம் செய்ய வைப்பதோ அல்லது அதை வைத்து வணிகம் செய்வதற்கோ சட்டப்படி தங்கள் கடமையை புரிந்து கொண்டு நடக்கவேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்துகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.