Breaking News

கொரோனா பெருந்தொற்று காரணமாக மாநில வரிகள் தணிக்கையை கைவிட்டது குயின்ஸ்லாந்து அரசு : வளர்ச்சித் திட்டங்களும் நிறுத்தி வைப்பு

Queensland government suspends state tax audit due to Corona epidemic, suspends development projects

2020 – 2021 ம் நிதி ஆண்டுக்கான மாநில வரிகள் வருவாய்க்கான 17 -வது தணிக்கை, குயின்ஸ்லாந்து தணிக்கை அலுவலகத்தால் பட்டியலிடப்பட்டு இருந்தது. நான்கு முக்கிய துறைகளில் தணிக்கை செய்ய திட்டமிட்டிருந்த அமைப்பின் நடவடிக்கைகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டது.

உலக பராம்பரிய தளங்களை மேம்படுத்துவதற்கான, உள்கட்டமைப்பு திட்டங்களும் பெருந்தொற்று காரணமாக தாமதமாவதாக தணிக்கை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல், சுகாதார மேலாண்மை, Torres Strait தீவு மக்களின் பராம்பரியத்தை பாதுகாத்தல் மற்றும் ஆசிரியர்களை பணியமர்த்துதல் ஆகிய முக்கிய திட்டங்களை உள்ளடக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரொனா காரணமாக நெருக்கடியை சமாளிக்கும் நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக சில தணிக்கை நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படுவதாக குயின்ஸ்லாந்து தணிக்கை அலுவலக செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

பல்வேறு ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது மற்றும் மாநில வரியை வசூலிக்கும் பணிகள் தணிக்கை நிறுத்தப்பட்டதன் காரணமாக முடங்கியுள்ளது. அதே நேரம், உள்ளூர் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான விண்ணப்பங்கள், அனுமதி ஆகியவை ஆண்டு தோறும் நடத்தப்படும் நிதி தணிக்கையின் கீழ் வந்துவிடும் என்றும், இதற்கென தனியாக தணிக்கை திட்டங்கள் இல்லை என்றும் QAO அதிகாரி குறிப்பிட்டுள்ளார். மேலும், இது அரசின் நிதி மேலாண்மையை பொறுத்து கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

குயின்ஸ்லாந்து அரசு வரிகள் மற்றும் ராயல்டி தொகை வசூலிக்கும் முறைகள் குறித்தும் கருவூலத்தின் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும் என்று குயின்ஸ்லாந்து தணிக்கை அலுவலகம் கூறியுள்ளது. 2017 – 2018ம் நிதி ஆண்டில் குயின்ஸ்லாந்து அரசு கருவூலத்தின் அறிக்கையின் அடிப்படையில் 10.8 பில்லியன் டாலர் வரிகள் வருவாயாகவும், 4.3 பில்லியன் டாலர் ராயல்டி தொகையாகவும் வரப்பெற்றாத தணிக்கை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மேலும், வரிகள் வசூலிக்கும் திட்டத்தில் புதிய மாற்றங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3tv6okG