Breaking News

Queensland மற்றும் New South Wales-ல் பெரும் ஆலங்கட்டி மழை!

Queenland-ல் தென்கிழக்கு மற்றும் New south Wales கடற்கரையில் வசிப்பவர்கள் பலத்த புயல் மற்றும் ஆலங்கட்டி மழை வெள்ளம் ஏற்பட்டதால் மக்கள் பாதுக்காப்பாக இருக்கும்படி வலியுறுத்தப்படுகிறார்கள்.

Queensland டென்னிஸ் பந்து அளவிலான ஆலங்கட்டி கற்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.மாநிலத்தின் தென்கிழக்கு முழுவதும் தொடர்ச்சியான ஆபத்தான supercell thunderstorms வருவதற்கான எச்சரிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

சனிக்கிழமை அன்று Sunshine கடற்கரைக்கு வடக்கே NSW எல்லையில் இருந்து Wide Bay வரை Great Dividing மலைப்பகுதியில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்தது.

மேலும்,மாலையில் இது அதிகமாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நிலைமை மாறிக்கொண்டே இருப்பதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்த புயலின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.Brisbane-ற்கு தெற்கே உள்ள லோகனில் ராட்சச 14 சென்டிமீட்டர் ஆலங்கட்டி மழை பெய்தது. 7 சென்டிமீட்டர் விட்டம் கொண்ட ஆலங்கட்டி நகரத்தின் மேற்கே Ipswich மற்றும் Lockyer valley-யில் விழுந்தது.இதுபோல் கடுமையான புயல்களை கண்டதில்லை என்று வானிலை ஆய்வாளர் Lauren Pattie தெரிவித்தார்.

சனிக்கிழமை அன்று வானிலை ஆய்வு மையம் NSW கடற்கரை முழுவதும் Dubbo வரை உள் நாட்டிலும் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்தது.சிட்னியின் தென்மேற்கு பகுதியான Camden, Campbelltown, Sutherland, Liverpool, Helensburgh மற்றும் Bundeena ஆகிய பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கில் உள்ள வாம்பனுக்கும் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Deua நதி 4.4மீட்டர் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளார்கள்.

42,000ற்கும் மேலான மின் பயனாளிகள் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக Energex தெரிவித்துள்ளது. Brisbane, the Gold Coast, Redland City, Moreton Bay, Ipswich, Gympie, Somerset, South Burnett, the Scenic Rim, மற்றும் the Sunshine Coast ஆகிய பகுதிகளுக்கு கடுமையான் இடியுடன் கூடிய மழை எச்சைரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.