Breaking News

Queensland கடற்கரையில் கொரோனா தொற்று-சுகாதாரத் துறை கண்டுபிடிப்பு !

Sunshine கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள சரக்குக் கப்பலைச் சேர்ந்த குழுவினருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய சுகாதார அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

MV Sofrana Survile-ல் கோவிட் தொற்று இருப்பதாக நியூசிலாந்து எச்சரித்ததால் அதை Brisbane-இல் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட பரிசோதனையில் Sofrana-வில் 19 பணியாளர்களில் இருவருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டு Mainland மருத்துவமனைக்கு வெள்ளியன்று மாற்றப்பட்டனர்.

நியூசிலாந்து அரசாங்கம் இந்த தொற்று அறிகுறியில் genomic sequencing-ஐ கடைபிடிக்குமாறு Queensland அரசை கேட்டுக்கொண்டுள்ளது என்று Deputy Premier Steven Miles தெரிவித்தார்.

Safrona நியூசிலாந்திலிருந்து புதிய philipines குழுவினர்களுடன் New Caledonia-வில் உள்ள Nowmea-வில் நிறுத்தம் செய்துவிட்டு Brisbane-க்கு பயணம் செய்தது.

அந்த கப்பலில் பணிபுரிந்த Engineer-க்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அடுத்த கட்ட சோதனைகள் நடத்தும்படி ஆஸ்திரேலிய சுகாதாரத் துறையை நியூசிலாந்து அரசு கேட்டுக்கொண்டது.

Queensland-ல் புதிய தொற்றுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. மாநிலத்தில் 6 தொற்றுகள் தற்போது நிலுவையில் உள்ளது.Queenland-ல் கடந்த 44 நாட்களில் உள்ளூரில் எந்த தொற்றும் பதிவாகவில்லை.Queensland-ன் எல்லைகள் NSW-விற்கு அடுத்த வார இறுதியில் திறக்கப்படும் என Dr Miles வெள்ளியன்று தெரிவித்தார்.