Breaking News

ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி நடவடிக்கைகளில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக மக்கள் ஆத்திரம் : மத்திய கடற்கரை பகுதியில் இருந்து சிட்னியின் தொற்றுப் பரவல் மையங்களுக்கு அனுப்பப் பட்டதால் மேலும் தொற்று பரவும் அபாயம்

Public outrage over vaccine disruption in Australia. Risk of further outbreak as it is sent from the central coast to Sydney's outbreaks

கோவிட் 19 – ஃபைசர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்காக மத்திய கடற்கரை பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று நிலையில் அங்கு தடுப்பூசி இல்லை என்று கூறி அவர்களை சிட்னியின் மிக அதிகமாக தொற்று பரவும் மையங்களாக கண்டறியப்பட்ட இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டதால் மக்கள் கடுமையான மன உளைச்சலுக்கும், ஆத்திரத்துக்கும் ஆளாகினர்.

Belmont Mass தடுப்பூசி மையத்தில் பூசி போடுவதற்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்த அவர்களுக்கு உரிய முறையில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு இருப்பதாகவும், தற்போது அவர்களுக்கு தடுப்பூசி இல்லாததால் மறு நேரம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Public outrage over vaccine disruption in Australia. Risk of further outbreak as it is sent from the central coast to Sydney's outbreaks,அதேநேரம் இந்த நடவடிக்கைகளில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் இது சாதாரண நடவடிக்கையே என்றும், முன்பதிவு செய்தவர்களுக்கு உரிய முறையில் குறுஞ்செய்தி அனுப்பியும் அதேநேரம் சிட்னியின் எந்தெந்த மையங்களுக்கு செல்ல வேண்டும் என்ற விபரங்களும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. முதியோர் பராமரிப்பாளர்கள் உள்ளிட்ட முன் களப் பணியாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒருசிலருக்கு தடுப்பூசி போடுவது அரசு செய்யப்பட்டிருப்பதாகவும் அது தொடர்பான விரிவான விவரங்கள் அவர்களிடம் பகிரப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரம் தடுப்பூசி செலுத்தப்படுவதால் மக்கள் கடும் ஆத்திரத்திற்கு ஆளாகினர்.

அதிலும் முதியோர் பராமரிப்பாளர்கள் சிலருக்கு இரண்டாவது தடுப்பூசிகள் முன் அனுமதி ரத்து செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் தொடர்ந்து தங்களது பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இதுதொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத் துறைக்கு சிலர் இமெயில் வாயிலாகவும் தங்களது புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய கடற்கரை பகுதி ஊரடங்கு கட்டுப்பாட்டு நிலையில் இருப்பதால் அங்கிருந்து மக்கள் வேறு இடங்களுக்கு தடுப்பூசிக்காக அனுப்புவது சரியான நடவடிக்கை அல்ல என்றும், முன்னுரிமை குழுவில் இருப்பவர்களைத் தவிர மேலும் சிலர் சில வாரங்கள் பொறுத்திருந்து தான் ஆக வேண்டும் என்றும் ப்ரீமியர் Gladys Berejiklian கூறியுள்ளார்.

தடுப்பூசி விவகாரங்களில் நிகழும் இதுபோன்ற குழப்பங்களுக்கு தீர்வு காண வேண்டும் என்றும், மிக மோசமான தடுப்பூசித் திட்டங்கள் நடைமுறையில் இருப்பதாகவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

Link Source: https://ab.co/3ifQVCu