Breaking News

சென்னையில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

The public is shocked as the price of petrol in Chennai has crossed 100 rupees.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை சந்தை நிலவரத்திற்கேற்ப எண்ணெய் நிறுவனங்களால் தினசரி மாற்றி அமைக்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.13,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.93.72 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. மக்களின் அன்றாட தேவைகளான உணவு  ,உடை,  இருப்பிடத்தை போன்று பெட்ரோலும் ஒரு முக்கிய பங்கு வகித்து வருகிறது.

The public is shocked as the price of petrol in Chennai has crossed 100 rupeesபலரும் சைக்கிள் பயணத்தை மறந்து இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகன பயணத்திற்கு தங்களை மாற்றிக் கொண்ட நிலையில் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலையில் தினசரி உயர்வால் சாமானியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருவதோடு அரசியல் கட்சிகளும் போராட்டங்களில் களமிறங்கியுள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர உயர பெட்ரோல், டீசல் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை இன்று ரூ. 33 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.13 காசுகளுக்கு விற்பனையாகிறது.

public is shocked as the price of petrol in Chennai has crossed 100 rupees.அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூ.93.72 காசுகளுக்கு விற்பனையாகிறது. ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் விலை சதமடித்த நிலையில் தற்போது சென்னையிலும் பெட்ரோல் விலை 100ஐ தாண்டியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் சுமார் 30 மாவட்டங்களுக்கு மேலாக பெட்ரோல் விலை 100ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது. இருப்பினும் சென்னை வரலாற்றில் இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு நிதி நெருக்கடியில் உள்ளதால் பெட்ரோல் விலையை குறைக்க முடியாயது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏற்கனெவே தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் விலை உயர்வால், காய்கறி, வாகனங்களின் வாடகை, உணவுப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://bit.ly/3dDvzMS