Breaking News

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி மார்ச் 15ம் தேதி பாராளுமன்றத்தில் போராட்டம் !

Protest in Parliament on March 15 demanding action against #MeToo

me toஜனவரி 25ஆம் தேதி Scott Morrisonனுக்கு அருகில் மேடையில் Grace Tame நின்றபோது ஆஸ்திரேலியாவின் #MeToo இரண்டாவது அலை உருவாகும் என்று அவர்களுக்கு தெரியாது. இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளனர். மேலும் ராஜினாமா செய்வதற்கான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த இரண்டு அமைச்சர்களும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளனர்.

கடந்த மாதத்தில் நடந்த சம்பவத்தால் பல ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய பெண்கள் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்த நாட்டின் தலைநகரை நோக்கி செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால் இது குறித்து பிரதமர் அறிந்து கொள்ளாமல், பாலியல் தொல்லையிலிருந்து தப்பியவர்கள் தங்கள் கதையை கூற அனுமதிக்க வேண்டும் என்று வாதாடியதற்காக Grace Tameக்கு ஆஸ்திரேலிய விருதை வழங்கினார்.

இதை பார்த்த முன்னாள் Liberal ஊழியர் Brittany தான் வேலை பார்த்த இடத்தில், அவருடன் பணிபுரிந்த பாதுகாப்புத் துறை அமைச்சரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குற்றம் சாட்டினார். ஆனால் இப்போது Grace Tame துணையாக பிரதமர் இருக்கும்போது, என்னுடைய பிரச்சனையின்போது அமைதியாக இருந்தது அவரது அரசாங்கம். இது ஒரு துரோகம். பிப்ரவரி 15ம் தேதி எனது பிரச்சனையை கூறியபோது, அரசியல் உள்நோக்கத்திற்காக கூறுவதாக தெரிவித்த பிரதமர், பின்னர் மன்னிப்பு கேட்டார். மேலும் குற்றச்சாட்டு குறித்து விசாரிப்பதாகவும் உறுதியளித்தார். இது அரசின் மீது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மார்ச் 3ஆம் தேதியன்று பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களின் குரல் பற்றிய விவாதம் தொடங்கியது. முதலாவதாக 1988ம் ஆண்டில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக highest-law officer Porter மீது குற்றம் சாட்டப்பட்டது. Canberraவில் சில மணி நேரங்களுக்கு முன்பு தான் Tame பாலியல் கொடுமைக்கு ஆளானவர்கள் தங்களுடைய கதையை வெளியே சொல்வதன் முக்கியத்துவத்தை பற்றி கூறினார். என் சக தோழிகளுக்கு நான் சொல்வது என்னவென்றால், நமக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தைரியமாக உண்மையை வெளியே கூற வேண்டும்.

மெல்பர்னின் உள்ள RMIT பல்கலைக்கழகத்தின் வேலை, பாலினம் மற்றும் ஒழுங்குமுறை பேராசிரியர் Sara Charlesworth, இது ஒரு வகையான தற்செயல் நிகழ்வு ஆகும். Catharine Lumby கூறுகையில், பெண்கள் எவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் அவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் போதிய பாதுகாப்பு இல்லை என்றார்.

இது குறித்து Janine Hendry கூறுகையில், மார்ச் 15ஆம் தேதி பாராளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தவும், இப்போராட்டத்திற்கு 40000 பேர் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறினார்.