சமீபத்தில் அதிகரித்துள்ள ஆன்லைன் தொழில் போட்டி மற்றும் முறையற்ற வர்த்தகம் காரணமாக நுகர்வோர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட வில்லை என்றும், டிஜிட்டல் துறையில் கோலொச்சும் பெரு நிறுவனங்களிடம் இருந்து நுகர்வோர்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியன் நுகர்வோர் கண்காணிப்பு ஆணையமான ACCC கேட்டுக்கொண்டுள்ளது.
அந்த அமைப்பில் இருந்து ஓய்வு பெற உள்ள அதன் தலைவர் Rod Sims, தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில் தனது இறுதி உரையை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், டிஜிட்டல், விமானத்துறை, எரிசக்தி மற்றும் நிதிப்பரிவர்த்தனை உள்ளிட்ட பிரிவுகளில் நுகர்வோர்களுக்கான ஏராளமான சவால்கள் உள்ளதாகவும் அவற்றை திறம்பட கையாள வேண்டும் என்றும் Rod Sims கூறினார்.
புதிய விதிகளை உருவாக்கி அதன் மூலம் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே இதற்கு ஒரே தீர்வு என்றும், முறையற்ற வர்த்தகம் சட்ட விரோதமான முறையில் அதிகரிக்கும் என்பதால் அது தடுக்கப்பட வேண்டிய ஒன்று என்றும் Rod Sims தெரிவித்துள்ளார்.
தாங்கள் வெற்றி பெறுவதற்காக பல்வேறு புதிய உத்திகளை நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி கொண்டே இருப்பதாகவும், அவர்கள் தொடர்ந்து சந்தையில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள கடுமையான போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் அதன் விளைவாக நுகர்வோர்களின் பாதுகாப்பு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படக்கூடாது ACCC அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
2021 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் தொழில்வளர்ச்சித்துறை துறைக்கு அளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இது போன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் பட்சத்தில் நுகர்கோர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்றும் ACCC அமைப்பு தெரிவித்துள்ளது.
Link Source: https://bit.ly/3HfcTig