Breaking News

ஆஸ்திரேலிய பூர்வக்குடி இளம்பெண் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து அரசு தலைமை வழக்கறிஞர் விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Prosecutors have urged the state's attorney general to investigate the arrest of an Australian Aboriginal teenager.

கடந்த புதன்கிழமை சிட்னி வைன் ஸ்டிரீட் சாலையில் பயணம் செய்த Tarniesha widders என்ற இளம் பெண்ணின் வாகனத்தை காவலர்கள் நிறுத்தியுள்ளனர். காவலர்கள் அவரின் அடையாள அட்டையை கேட்ட நிலையில், அதற்கான காரணத்தை Tarniesha கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த பூர்வக்குடி இளம்பெண் காவலர்களின் அனுகுமுறையால் மேலும் பதற்றமடைந்துள்ளார்.

இது வாக்குவாதமாக மாறிய நிலையில் காவலர்கள் Tarniehsa வை மனிதாபிமானமற்ற முறையில் அவரை கைது செய்ததாகவும், அருகில் இருந்த அவரின் பெண் தோழியான Lily Bayle’s குற்றம்சாட்டியுளார். உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட தன் தோழியை காக்க முற்பட்ட தன்னையும் காவலர்கள் தரையில் தள்ளியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் உளவியல் பிரச்சனை உள்ள நபர்களை கையாள காவல்துறைக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் ஜார்ஜ் நியூ ஹவூஸ். மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒரு பூர்வக்குடி என்பதால் நீதித் துறை சார்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வழக்கறிஞர் ஜார்ஜ் நியூ ஹவுஸ் வலியுறுத்தியுள்ளார்.