ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நாட்டை தங்கள் வசம் கொண்டு வந்துள்ள நிலையில் அங்குள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், படைவீரர்கள், மற்றும் தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவதற்கான முயற்சிகளில் குறிப்பிட்ட நாடுகள் செயல்பட்டு வருகின்றன. அமெரிக்கா தனது படை வீரர்களையும் தூதரக அதிகாரிகளையும் அழைத்து செல்வதற்காக சிறப்பு ராணுவ விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது. இதேபோன்று ஆஸ்திரேலியாவும் தனது படை வீரர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளை அழைத்துச் செல்லும் அதே வேளையில் விசா வைத்துள்ள ஆப்கன் நாட்டு மக்களையும் அகதிகளாக அழைத்துச் செல்வதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்ட ஆஸ்திரேலியாவின் ராணுவ விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ராணுவப் படை தளத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. தாலிபான்கள் அரசு அமைக்கும் பட்சத்தில் யார் அதிபர் என்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வேறு நாடுகளுக்கு செல்வதற்காக விமான நிலையத்தில் குவிந்துள்ள நிலையில் அங்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் அகதிகளை தங்க வைப்பதற்கான போதுமான வசதிகள் இருந்தாலும் பெரும்பாலான ஆப்கானியர்கள் மற்றும் ஆஸ்திரேலியர்களை விமான நிலையத்திலேயே விட்டு வர வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அங்கு ஏற்பட்ட பதட்ட நிலை படைவீரர்களையும் அங்கிருந்து மீட்டு வர முடியாத சூழலை உருவாக்கியதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு துறை அமைச்சர் Peter Dutton கூறியுள்ளார்.
அமெரிக்க ராணுவ விமானம் ானசி பதினேழில் 600க்கும் அதிகமான நபர்கள் பறித்துச் சென்றது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் குறைந்துள்ள நிலையில் அதனை கையாள்வதற்கான என்ற திட்டமும் தாலிபான்கள் இடமோ, ராணுவத்திடமோ இல்லை என்று Peter Dutton தெரிவித்துள்ளார். விமான நிலையத்தில் உள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் விசாரித்துக்கொண்டு காத்திருப்பதாகவும் அவர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் இருக்கும் அமைதியற்ற சூழலை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ராணுவம் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Link Source: https://bit.ly/37XCWv4