Breaking News

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகணத்தில் புதிய சொத்து வரி திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் : தொழில்துறை நிச்சயமற்ற எதிர்காலத்தை கொண்டுள்ளதாக ப்ரீமியர் டேனியல் ஆன்ட்ருஸ் கவலை

Problem in implementing new property tax plan in Australia's Victoria. Premier Daniel Andrews worried industry has uncertain future

விக்டோரியா மாகாணத்தில் புதிய சொத்து வரி விதிப்பை அமல்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வரும் நிலையில் இந்த விவகாரத்தில் மாகாண அரசு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

பல்வேறு கவுன்சில் அமைப்புகளுக்கு அரசு செலுத்தும் வரி விவகாரத்தில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் புதிய சொத்து வரி விவகாரத்தில் மாகாண அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, ஜூலை 2024 முதல் மெல்போர்ன், ஜீலாங், பென்டிகோ மற்றும் Ballarat ஆகிய இடங்களில் உள்ள மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குடியிருப்புகளின் அனைத்து புதிய வளர்ச்சிகளின் மதிப்பிலும் 1.75 சதவீத வரியை குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Problem in implementing new property tax plan in Australia's Victoria. Premier Daniel Andrews worried industry has uncertain future..இந்த புதிய வரி விதிக்கப்படுவதன் மூலமாக அரசுக்கு ஆண்டுக்கு 800 மில்லியன் டாலர் வருவாய் திரட்ட முடியும் என்று கூறப்படுகிறது. இந்த நிதியானது பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும், ஒரு வருடத்திற்கு கூடுதலாக 1700 சமூக நல வீடுகளை கட்டமுடியும் என்றும் ஹவுசிங் அமைச்சர் Richard Wynne கூறியுள்ளார். ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் புதிய சொத்து வரி விதிப்பு முறைக்கு தங்களது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். விக்டோரியா அரசு இந்த வரி விதிர்ப்பு முறையை அமல்படுத்த வேண்டும் என்றால் க்ராஸ்பெஞ்ச் முறையில் எதிர்க்கட்சிகள் ஆதரவாக வாக்களிக்க வேண்டிய நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் தொழில்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் உள்ளடக்கி பார்க்கும் போது இந்த புதிய வரி விதிப்பு மசோதா எதிர்காலத்தை கொண்டதாக இல்லை என்றும், இதன் மூலம் தொழில்துறைக்கும் அரசுக்குமான ஒப்பந்தம் சீரான முறையில் இயங்குவதற்கான வாய்ப்பு இல்லை என்று சொத்து பராமரிப்பு கவுன்சில் கூறியுள்ளது.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 வது வரி விதிப்பு முறையாக மாகாண அரசு தற்போது இதனை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் கவுன்சில் தெரிவித்துள்ளது. மேல்சபையில் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு அடுத்த 14 நாட்களில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி இருப்பது விக்டோரியா மாகாண அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

Link Source: https://ab.co/3paR0up