Breaking News

காவலர்களை தாக்கிய போராட்டக்காரருக்கு சிறை..!!

கொரோனா ஊரடங்குக்கு எதிராக மெல்பேர்ன் போராட்டத்தில் ஈடுபட்ட நபர் கைது.

Prisoner jailed for assaulting guards

காவல்துறை அதிகாரிகளை தாக்கிய குற்றத்தில் கைதாகி சிறையில் அடைப்பு.

காவல் அதிகாரிகளையும், காவல்துறைக்கும் சொந்தமான குதிரையையும் தாக்கியவர் மீதான குற்றம் நிரூப்பிக்கப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

மெல்பேர்னில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் பலர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவலர்கள் சிலர் குதிரைகள் மீது அமர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். திடீரென போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து, டென்னிஸ் பேசிக் என்கிற நபர் காவல்துறை அதிகாரி ஒருவரை தாக்கினார். மேலும் அவர் கையில் இருந்த கம்பால் அதிகாரியின் குதிரையை கொடூரமாக அடித்தார். இதையடுத்து டென்னிஸ் பேசிக்கை கைது செய்த காவல்துறை, அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரிகப்பட்டு வந்ததை அடுத்து, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, டென்னிஸ் பேசிக் மீதான குற்றம் நிரூப்பிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 2 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி ட்களஸ் ட்ராப்னெல் உத்தரவிட்டார். குற்றஞ்சாட்டப்பட்ட டென்னிஸ் பேசிக் ஏற்கனவே பல்வேறு குற்றச்செயல்களில் தேடப்பட்டு வந்த நபராக உள்ளார். அதனடிப்படையில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி ட்களஸ் விளக்கம் அளித்துள்ளார்.