Breaking News

இளவரசர் சார்லசின் உதவியாளர் ராயல் அறக்கட்டளையில் இருந்து விலகினார் : செளதி வர்த்தகருக்கு உதவியதாக எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை

Prince Charles' aide resigns from Royal Trust

செளதியை சேர்ந்த நன்கொடையாளரும், வர்த்தகருமான Mahfouz -க்கு பல்வேறு விவகாரங்களில் உதவியதாக புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து இளவரசர் சார்லஸின் முன்னாள் நெருங்கிய உதவியாளர் Michael Fawcett ராயல் அறக்கட்டளையில் இருந்து வெளியேறி உள்ளார்.

Prince Charles' aide resigns from Royal Trust.Mahfouz Marei Mubarak bin Mahfouz இளவரசரின் ராயல் அறக்கட்டளைக்கு 2.7 மில்லியன் டாலர் நிதி உதவி அளித்துள்ளதாகவும், அரண்மனையின் புராதன சின்னங்களை புதுப்பிக்கவும், இளவரசர் தங்குமிடத்தை சீரமைக்கவும் அந்த பயன்படுத்தப்பட்டதாக தி டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக 2016 ம் ஆண்டு பிரிட்டிஷ் எம்பயருக்கான கெளரவ பட்டத்தை இளவரசர் சார்லஸ் வழங்கி உள்ளார். இதற்கான அனைத்து உதவிகளையும் தவறான முறையில் ஏற்படுத்தி தந்ததாகவும் சார்லஸ் முன்னாள் உதவியாளர் Michael Fawcett மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் செளதி இவை அனைத்தையும் மறுத்துள்ளன.

அதே நேரம் ராயல் அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து Michael Fawcett தற்காலிகமாக விலகி உள்ளதாகவும், அவர் உரிய விசாரணைக்கு பின்னர் மீண்டும் பொறுப்பேற்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Prince Charles' aide resigns from Royal Trust,.,இரண்டாம் எலிசபெத் ராணிக்கு உதவியாளராக இருந்த Michael Fawcett பின்னர் இளவரசர் சார்லஸ்க்கு நெருங்கிய உதவியாளராக பணியாற்றி வந்தார். அதன்பின்னரே அவர் ராயல் அறக்கட்டளையில் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 2003ஆம் ஆண்டு அறக்கட்டளையின் ராயல் பரிசுப் பொருட்களை விற்பனை செய்ததாக அவர் மீது புகார் எழுந்த நிலையில் அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அது நிதி முறைகேடு மட்டுமே என்பது நிரூபிக்கப்பட்டது. அதன் பின்னர் நிதிப் பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகிய Michael Fawcett இளவரசர் சார்லஸின் நிகழ்வுகளை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

தற்போது மீண்டும் எழுந்துள்ள புகார் குறித்து விரிவான விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக விசாரணைக்குப் பின்னர் அவர் மீண்டும் ராயல் அறக்கட்டளையில் இணைந்து பணி புரிவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Link Source: https://ab.co/2WYTpgP