Breaking News

அமெரிக்கா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை காட்டிலும் 20 சதவீதம் வாயு வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் பேச்சு : தகவல் தவறானது என உண்மை கண்டறியும் குழு விளக்கம்

Kirribilli House பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பருவநிலை மாற்றம் தொடர்பான பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

அப்போது அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, ஜப்பான், ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடுகையில் 20 சதவிகிதம் குறைவாக கரியமில வாயு வெளியேற்றத்தை ஆஸ்திரேலியா கட்டுப்படுத்து இருப்பதாக கூறியிருந்தார்.

Prime Minister Scott Morrison says gas emissions are 20 percent lower than in the United States, Canada and Japan..பிரதமர் தெரிவித்த கருத்துக்களில் முரண்பாடு இருப்பதால் இது தொடர்பாக உண்மை கண்டறியும் குழு இந்த தகவல்களை ஆராய்ச்சி செய்தது. அதனடிப்படையில் பிரதமர் குறிப்பிட்ட நாடுகளுடன் கரியமில வாயு வெளியேற்றத்தை ஆஸ்திரேலியா குறைந்திருப்பதாக கூறிய தகவலில் உண்மை இல்லை என்றும், 2020ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் படி 20 சதவீதம் வாயு வெளியேற்றம் கட்டுப்படுத்தப் படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

உண்மை கண்டறியும் குழு ஆராய்ச்சி செய்த தரவுகள் ஆஸ்திரேலியாவின் தேசிய பசுமைக்குடில் வாயு வெளியேற்ற அமைப்பு தெரிவித்த தகவல்களின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்பட்டது என்றும், 2005 முதல் 2020 வரையிலான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஆராய்ச்சி செய்யப் பட்டதாகவும் உண்மை கண்டறியும் குழு கூறியுள்ளது.

பருவநிலை மாற்றம் தொடர்பாக மற்ற நாடுகள் வெளியிட்ட அறிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் பிரதமர் ஆஸ்திரேலியா குறித்த தனது கருத்தை மாணவர்கள் மத்தியில் தெரிவித்திருப்பதாகவும் அதில் உண்மை இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Prime Minister Scott Morrison says gas emissions are 20 percent lower than in the United States, Canada and Japanஇதற்கு முன்னதாக ஜி20 நாடுகளை ஒப்பிடும் போது ஆஸ்திரேலியா 20 சதவீதம் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த இருப்பதாக பிரதமர் தெரிவித்திருந்த நிலையில் அந்த கருத்திலும் முரண்பாடு இருப்பதாக உண்மை கண்டறியும் குழு ஏற்கனவே கூறியிருந்தது. 2020 ஆம் ஆண்டு ஆய்வு முடிவுகளின்படி பல்வேறு சர்வதேச நாடுகளோடு ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியாவின் உடைய வாயு வெளியேற்றத்தை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதே நேரத்தில் அது 20 சதவீதமாக குறைக்க வில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்த தரவுகள் உண்மைக்குப் புறம்பானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக லிபரல் கட்சி சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளை விட 20 சதவீதம் வாயு வெளியேற்றத்தை ஆஸ்திரேலியா கட்டுப்படுத்தி இருப்பதாக தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Link Source: https://ab.co/37sNDZz