Breaking News

ஆப்கானிஸ்தானில் உள்ள ஆஸ்திரேலியப் படைகள் செம்டம்பர் மாதத்திற்குள்ளாக திரும்ப பெறப்படும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்

Prime Minister Scott Morrison says Australian troops in Afghanistan will be withdrawn by September

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், 2001 ல் இருந்து ஆப்கானிஸ்தானில் , ஆஸ்திரேலிய படைகள் நிறுத்தபட்டதாக தெரிவித்தார்.

அமைதியை நிலைநாட்டும் இந்த முயற்சியில் 39,000 ஆஸ்திரேலிய பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இவர்களில் 41 பேர் வீர மரணம் அடைந்ததாக தெரிவித்த பிரதமர், அவர்களின் அனைவரின் பெயரையும் கண் கலங்கியவாரே வாசித்தார்.
Prime Minister Scott Morrison says Australian troops in Afghanistan will be withdrawn by September 1இவர்களின் தியாகம் என்றும் நினைவு கூறத்தக்கது என்று தெரிவித்த பிரதமர் ஸ்காட் மாரிசன் சிக்கலான தருணத்தில் அமைதியை எதிர்பார்த்து ஆப்கானிஸ்தான் மக்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க ஆஸ்திரேலிய அரசு உறுதி கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர்கள் பலர் உயிர் தியாகம் செய்து ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட முயற்சி மேற்கொண்டதாகவும் ஆப்கன் அரசாங்கமும் தாலிபன் அமைப்பும் அந்த அமைதியை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Prime Minister Scott Morrison says Australian troops in Afghanistan will be withdrawn by September 2பலர் உயிர் தியாகம் செய்தது மட்டுமில்லாமல், ஆஸ்திரேலிய வீரர்கள் பலருக்கு மனதளவிலும், உடல் அளவிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். தற்போது ஆப்கானிஸ்தானில் 81 ஆஸ்திரேலிய வீரர்கள் உள்ளதாகவும், அவர்கள் செம்படம்பர் மாதத்திற்குள்ளாக தாயகம் திரும்புவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர்கள் மீது வைக்கப்பட்ட போர் குற்றங்கள் சம்பவங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ஸ்காட் மோரிசன், அது குறித்து இந்த தருணத்தில் பேசுவது சரியானதாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.