தென்னாப்பிரிக்காவிலிருந்து பரவத் தொடங்கிய மைக்ரான் வகை புதிய திரிபு வைரஸ் ஆஸ்திரேலியாவில் இதுவரை 5 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது இதனை அடுத்து மாகாண எல்லைகளை உடனடியாக மூடியுள்ள அரசு சர்வதேச எல்லைகளை மூடுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் புதிய திரிபு வகை ஒமைக்ரான் வைரஸ் மீண்டும் ஆஸ்திரேலியாவை முடக்க நிலைக்கு கொண்டு செல்லாது என நம்புவதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒமைக்ரான் வைரஸ் அச்சமூட்டும் வகையில் இல்லை என்றும், அதன் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை ஆஸ்திரேலியாவை முடக்க நிலைக்கு கொண்டு செல்லாது என்றும் அவர் கூறியுள்ளார்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்த நிலையில் புதிய வகை வைரஸ் காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்ற நிலை உருவானது. இந்நிலையில் பிரதமர் ஸ்காட் மோரிசன் இவ்வாறு அறிவித்துள்ள நிலையில் பல்வேறு மாகாணங்களில் மாகாண எல்லைகள் மூடப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது மக்களிடையே மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக விசா பெற்று காத்திருக்கும் சர்வதேச பயணிகளுக்காக டிசம்பர் 15ஆம் தேதி வரை சர்வதேச எல்லைகள் செயல்படும் என்றும் அதற்கான உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்ட இருப்பதாகவும் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். பணியாளர்கள், மாணவர்கள் என 20 ஆயிரம் சர்வதேச பயணிகள் ஆஸ்திரேலியாவுக்கு வர இருந்த நிலையில் தற்போது அவர்களின் பயணம் இரண்டு வார காலம் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் இருந்து முழுவதுமாக தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட பயணிகளுக்கான வருகையும் தற்போது டிசம்பர் 15ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நாம் எதிர்கொண்ட வைரசைப் போல இதனை கையாள முடியாது என்றும், இந்த வகை வைரஸ் மிகவும் தீவிரத் தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தாஸ்மானியா வில் தொடர் பரவல் பாதிப்பைத் தொடர்ந்து சர்வதேச எல்லைகளை மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் விமானங்கள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வியாபர விரும்பும் பயணிகள் 14 நாட்கள் முன்னதாக தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் முழுவதுமாக தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது உரிய காரணங்கள் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
Link Source: https://bit.ly/3Ef5Q8I