Breaking News

உக்ரைன் மீது ரஷ்யா சட்டவிரோதமான படையெடுப்பை துவங்கியுள்ளது என்றும், இதற்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகள் பல கடுமையான பதிலடியை கொடுக்கும் என பிரதமர் ஸ்காட் மோரீசன் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் டொன்பாஸ் பகுதியில் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெளிப்படையாக உத்தரவு வழங்கினார். இதையடுத்து உக்ரைனுக்குள் ரஷ்யாவின் படையெடுப்பு துவங்கியுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

Prime Minister Scott Morrison has said that Russia has launched an illegal invasion of Ukraine and that the world community, including Australia, will retaliate..ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உக்ரேனிய ராணுவம் மற்றும் விமானங்களை குறிவைத்த்து தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. உக்ரேனிய எல்லைக்குள் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்கள் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இதுதொடர்பாக தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன், உக்ரைன் மீது படையெடுக்க ஒரு சாக்குப்போக்கை உருவாக்கி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் படையெடுப்பை நடத்தி வருகிறார். ரஷ்யாவின் தவறான தகவல்களையும் பிரச்சாரங்களையும் யாரும் நம்பபோவதில்லை என்று அவர் கூறினார்.

Link Source: https://ab.co/3Ip77fv