கடந்த செவ்வாய் அன்று ஊடகங்களிடம் பேசிய சாலமன் தீவு நாட்டின் பிரதமர் மானசா சோகாவரே, தங்களுடைய நாட்டுக்குள் ஆஸ்திரேலியா ஊடுருவ குற்றஞ்சாட்டுவதாக பகிரங்கமாக தெரிவித்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன், சாலமன் தீவுகளுக்குள் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்றனர் என்று கூறினார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த லேபர் கட்சியின் முக்கிய தலைவர்கள், சாலமன் தீவுகள் மற்றும் சீனா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தான போது பிரதமர் ஸ்காட் மோரீசன் பேசாமல் இருந்தது வியப்பை தருவதாக கூறியுள்ளனர். கடந்த ஆகஸ்டு மாதமே இதுகுறித்து ஆஸ்திரேலிய அரசுக்கு தெரியவந்தது. எனினும், ஸ்காட் மோரீசன் அரசாங்கம் எதுவும் செய்யவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.