Breaking News

கொரோனா பரவ தொடங்கிய காலக்கட்டத்தில் தன்னுடைய அரசாங்கம் பல்வேறு தவறுகளை செய்துள்ளதாகக் கூறி வருத்தம் தெரிவித்த பிரதமர் ஸ்காட் மோரீசன், மீண்டும் பொதுமக்கள் ஆதரவை பெறுவதற்கான நோகத்துடன் செயல்படப்போவதாக தெரிவித்துள்ளார்.

கான்பெராவில் நடைபெற்ற தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில் நிகழ்வில் பிரதமர் ஸ்காட் மோரீசன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆஸ்திரேலியாவில் ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவலை தன்னுடைய அரசாங்கம் சரியாக கையாள தவறிவிட்டது. அதற்கான விமர்சனம் மற்றும் குற்றச்சாட்டுகளில் என்னுடைய பங்கை நான் தாராளமாக ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோரீசன், தொற்று நோய் பரவலால் சமூகத்தில் மக்களிடையே விரக்தியான மனநிலை தோன்றியுள்ளது. தொற்று பாதிப்பு ஏற்படுத்தியுள்ள சோர்வு உணர்ச்சியால் பொருளாதார வளர்ச்சியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் சரிந்து கிடக்கும் வேலை வாய்ப்பை நடப்பாண்டில் தலை நிமரச் செய்வேன். தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் வாழ தகுதியுள்ள நாடாக ஆஸ்திரேலியாவை மாற்றிக் காட்டுவேன் என பிரதமர் ஸ்காட் மோரீசன் உறுதி அளித்தார்.

Link Source: https://bit.ly/3L1muwm