Breaking News

வருந்தத்தக்க வகையில் தவிர்க்க முடியாத படையெடுப்பு ஏற்பட்டால் ஆஸ்திரேலியா உக்ரைனுக்கு படைகளை அனுப்பாது என பிரதமர் ஸ்காட் மோரீசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றச் சூழலை குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்தார். அப்போது ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் இன்னும் சில வாரங்களில் உக்ரைனை ஆக்கிரமித்துவிடுவார் என்று கூறினார்.

இதுதொடர்பாக பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் துருப்புக்கள் மூலமாகவோ அல்லது அந்த வகையிலும் உக்ரைனுக்கு ஆஸ்திரேலியா ஆதரவை வழங்காது. இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது என்று ஸ்கார் மோரீசன் கூறினார்.

Link Source: https://bit.ly/3sUQjGH