Breaking News

ஆஸ்திரேலியாவில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாகாணங்களுக்கு நிவாரண உதவியை பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.

விக்டோரியா மாகாணத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் வரும் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

விக்டோரியாவில் 5 வது முறையாக இந்த ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

அதே போல் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

ஊரடங்கால் ஏராளமான பொதுமக்களும் , வர்த்தகர்களும் வருவாயின்றி தவித்து வருகின்றனர்.

வரும் வெள்ளிக்கிழமை அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ள நிலையில பல்வேறு முக்கிய அறிவிப்புகளை பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.

இதன்படி கொரோனா தொற்று பரவலால் போடப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாகாணங்களுக்கு நிதி உதவியை பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் படி ஊரடங்கால் வேலை இழப்பை சந்தித்துள்ளவர்களுக்கு $375-$600 வரை உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் இரண்டாவது வாரத்தில் இருந்து இந்த நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Prime Minister Scott Morrison has announced relief aid for the provinces affected by the floods in Australiaஅதே போல் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் வருவாய் இழப்பை சந்தித்துள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு, $1500-$10,000 வரை உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தங்கள் வர்த்தக்கத்தில் 30% சதவீதம் வரை இழப்பு ஏற்பட்டிருப்பதை அவர்கள் ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும் என்றும், பணியாளர்கள் யாரையும் வேலையை விட்டு நீக்கக்கூடாது என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

தனி நபர் வியாபாரிகளுக்கு $1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னி வாசிகள் இந்த உதவிக்கு தொகைக்கு வரும் வாரத்தில் இருந்து விண்ணப்பிக்க முடியுமென்று முதல்வர் கிளாடியஸ் பெரிஜியாக்கிளின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, விக்டோரியா முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ், தொற்று பாதிப்பின் அடிப்படையில் நிவாரண உதவிகளை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் நிதி உதவியை பெறுவதற்கு 7 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பது அவசியம் என்ற நிலையல், விக்டோரியாவில் 5 நாட்கள் மட்டுமே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வந்து சென்ற இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக விக்டோரியாவின் முதல்வர் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் ஒரே மாதிரியான உதவி தொகை கிடைப்பது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.

விகடோரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 75 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், 6500 நபர்கள் தொற்று பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா மாகாண முதல்வருடன் கலந்தாலோசித்ததாக கூறியுள்ள பிரதமர் மோரிசன், தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தற்காலிக மருத்துவ முகாம்கள் ஏற்படுதத்தப்படும் என்றும், அரசு மருத்துவ மனைகளில் தொலைப்பேசி சேவையில் சில மாற்றங்கள் செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் திட்டமிட்டத்தை விட தடுப்பூசி செலுத்திவத்தில் பின்தங்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு முயன்று வருவதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

Link Source: https://bit.ly/3z3NmoB