Breaking News

மெல்போர்ன் ஊரடங்கால் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு $500-$325 நிவாரண உதவி வழங்கப்படும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.

விக்டோரியாவில் பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த , மெல்போர்ன் பகுதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 7 நாட்கள் கடந்துள்ளது. இந்த ஊரடங்கு மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வணிக நிறுவனங்களும், அதை சார்ந்து இயங்கி வந்த தொழிலாளர்களும் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு அண்மையில் $250 மில்லியன் நிவாரனத் தொகை வழங்கப்படும் என்று விக்டோரியா மாகாண அரசு அறிவித்திருந்தது.

ஊரடங்கால் முடங்கியுள்ள மாகாண அரசுக்கு போதிய உதவிகளை காமன்வெல்த் செய்யவில்லை என்று ஸ்காட் மோரிசன் தலைமையிலான அரசு மீது விக்டோரியா பிரீமியர் விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் ஊரடங்கால் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு $500 முதல் $325 வரை நிவாரண தொகை வழங்கப்படும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

இந்த தற்காலிக உதவியானது வாரத்திற்கு ஒருமுறை வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தொற்றுபாதித்த பகுதிகள் என்று காமன்வெல்தால் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு இது போன்ற உதவி வழங்கப்படும் என்ற தேசிய கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிகிறது.

மெல்போர்ன் நகர் புறத்தில் பணிபுரியும் தொழிலாலர்களுக்கு இந்த நிவாரண தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில்,

புறநகர் பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்த உதவி கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவியை பெறுவதற்கு சில நிபந்தனைகளையும் அரசு அறிவித்துள்ளது. அதன்படி பெருந்தொற்று காலத்தில் வழங்கப்படும் அனைத்து விடுப்புகளையும் ஏற்கனவே பயன்படுத்தியிருந்தால், தற்போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு அறிவிப்பால் வேலையில்லாத நிலையில் இருப்பவர்கள் இந்த உதவித்தொகையை பெற முடியும்.

Prime Minister Scott Morrison has announced a $ 500- $ 325 relief package for workers who lost their jobs in the Melbourne riots17 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாரத்திற்கு 20 மணி நேரத்திற்கு மேலாக பணிபுரியும் நபர்களுக்கு $500ம், 20 மணி நேரத்திற்கு குறைவாக பணிபுரியும் நபர்களுக்கு $325ம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காமன்வெல்தில் இருந்து வேலையற்றவர்களுக்கான உதவித்தொகையை பெறுபவர்களும், ஏற்கனவே அரசின் உதவித்தொகையை பெறுபவர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தாது என்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

மேலும் செவ்வாய்க்கிழமை முதல் இந்த நிவாரணத்தொகையை பெறுவதற்காக இணையவழி மூலம் விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்படுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள தேசிய அமைச்சரவை கூட்டத்தில் இந்த நிதியை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

ஒரு வாரத்திற்கு 1 லட்சம் தொழிலாளர்களுக்கு $50 மில்லியன் செலவு ஏற்படும் என்றும் பொருளாளர் Josh Frydenberg தெரிவித்துள்ளார்.

காமன்வெல்தின் இந்த அறிவிப்பை ஆஸ்திரேலிய வர்த்தக சபை வரவேற்றுள்ளது.

மேலும் விக்டோரியாவில் தொற்று பரவலை கட்டுப்படுத்த அனைத்து முதியோர் பராமரிப்பு பணியாளர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிக்கலாமா என்பது குறித்தும் அமைச்சரை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3itU1Uf