Breaking News

கொரோனா பரவல் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் பணியாளர்களுடன் பிரச்னை உள்ளிட்ட விவகாரங்கள் காரணமாக முதியோர் பரமாபரிப்புத் துறை நெருக்கடியில் இருப்பதாக பிரதமர் ஸ்காட் மோரீசன் ஒப்புக்கொண்டுள்ளார்.

முதியோர் பராமரிப்புத் துறையின் ஆணையாரான லினெல் பிரிக்ஸ், அரசு காப்பகங்களிலுள்ள முதியோர்கள் கவனிப்பு இல்லாமல் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சில நேரங்களில் அவர்கள் தனியாக உயிரிழக்கும் சூழலும் ஏற்படுகிறது. இப்படி நடக்க அனுமதிக்கக்கூடாது. அரசாங்கம் உடனடியாக இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்

Prime Minister Scott Morrison has acknowledged that the geriatric care sector is in crisis due to activities related to the spread of corona and issues with staff..இதுதொடர்பாக செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய பிரதமர் மோரீசன், முதியோர் பராமரிப்புத் துறையில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டார். கொரோனா பரவல் காரணமாக பல்வேறு அழுத்தங்கள் சந்திக்க வேண்டியுள்ளது என்றார். மேலும் பேசிய அவர், ஆஸ்திரேலிய பேரிடர் மேலாண்மை பிரிவு மூலம் முதியோர் பராமரிப்புத் துறைக்காக தேவைகளை பாதுகாப்பு அமைச்சகம் பூர்த்தி செய்யும். இது மிகவும் எளிதாக நடந்து முடிந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது என்று பிரதமர் ஸ்காட் மோரீசன் தெரிவித்தார்.

Link Source: https://ab.co/3B6FMMm