Breaking News

ஆஸ்திரேலியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக உதவியதாகவும், கொரோனாவின் பிடியில் இருந்த் சுமார் 40 ஆயிரம் உயிர்களை அரசு காப்பாற்றியுள்ளதாகவும் பிரதமர் ஸ்காட் மோரீசன் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

Prime Minister Scott Morrison claim that the government has provided quick relief to flood-affected people in Australi

மற்ற நாடுகளை ஒப்பிடும் போது கொள்ளைநோய் கொரோனாவால் ஆஸ்திரேலியா கடுமையான நெருக்கடிகளை சந்தித்துள்ளது உண்மை தான். ஆனால் அந்த நோயினால் பாதிக்கப்பட்ட 40 ஆயிரம் உயிர்களை தன்னுடைய அரசு காப்பாற்றியுள்ளதாக பிரதமர் ஸ்காட் மோரீசன் கூறியிருந்தார்.

இதுகுறித்து ஆய்வு செய்ய ஊடகங்கள் தற்போது முனைப்பு காட்டி வருகின்றன. மொத்தம் 40 ஆயிரம் உயிர்கள் காக்கப்பட்டதாக பிரதமர் மோரீசன் எந்த அடிப்படையில் கூறுகிறார் உள்ளிட்ட கேள்விகள் பலரிடமும் எழுந்துள்ளன.

Prime Minister Scott Morrison claim that the government has provided quick relief to flood-affected people in Australia and saved about 40,000 lives from the grip of the corona has caused great controversyஇதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் கணிதவியல் துறை பேராசிரியர் ஜேம்ஸ் வுட், உலகளவில் 2020 முதல் 2021 வரையிலான மக்கள்தொகையில் 0.15 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதை ஆஸ்திரேலியாவோடு ஒப்பிடும் போது 40 ஆயிரம் என்று தெரியவருகிறது. இதை தான் பிரதமர் மோரீசன் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த புள்ளிவிவரம் அதிகாரம்பூர்வமானது இல்லை என்று பலரும் தெரிவித்துள்ளனர். எந்த நாடும் இந்த புள்ளிவிவரங்களை ஏற்காது என்று அவர்கள் கூறுகின்றனர். பிரதமர் மோரீசன் ஆதாரமற்ற விஷயங்களை மக்கள் மத்தியில் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதை அவர் தொடர்ந்து வருவது வேதனை அளிப்பதாக மனிதநலன் சார்ந்த செயல்பாட்டாளர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.