Breaking News

ஆப்கானிஸ்தான் மருத்துவமனை தீ விபத்தில் 82பேர் உயிரிழந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் Hassan Al-Tamimiஐ பதவி நீக்கம் செய்து பிரதமர் முஸ்தபா அல் காதிமி தெரிவித்துள்ளார்.

Prime Minister Mustafa al-Qadimi has fired Health Minister Hassan al-Tamimi in connection with the 82-person hospital fire in Afghanistan

ஆப்கனிஸ்தான் தலைநகர் பாக்தாத்தில் கொரோனா நோயாளிகளுக்கு Ibn al-Khatib மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

அடுக்குமாடி கட்டடத்தில் செயல்பட்டு வந்த மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்தனர்.

இம்மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை அறைகளின் மேற்கூரைகள் எளிதில் தீப்பற்றக்கூடியதாக இருந்ததால் தீ மளமளவென்று அடுத்தடுத்த தளங்களுக்கு பரவியது.

Prime Minister Mustafa al-Qadimi has fired Health Minister Hassan al-Tamimi in connection with the 82-person hospital fire in Afghanistanமேலும் மருத்துவமனைகளில் போதிய தீ தடுப்பு கட்டமைப்புகள் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட போது பலர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்ததாகவும், அதில் பெரும்பாலானவர்களுக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்ட போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவரர்கள், உறவினர்கள் என 82 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆக்சிஜன் சிலிண்டரில் ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

Health Minister Hassan al-Tamimi
இது தொடர்பாக சுகாதாரத்துறை தரப்பில் வெளியிடப்பட்ட குறிப்பில், தீ விபத்தி போது மருத்துவமனையில் சிக்கியிருந்த 200க்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆப்கன் பிரதமர் முஸ்தபா அல் காதிமி தெரிவித்துள்ளார். தீ விபத்தை தொடர்ந்து கிழக்கு மண்டலத்தின் சுகாதாரத்துறை இயக்குனர், மருத்துவமனையின் பணிபுரிந்த நிர்வாகிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சுகாதாரத்துறை அமைச்சரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேகுகள் டிரெண்டு செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அம்மாநில ஆளுநர் முகமது ஜாபர் ஆகிய இருவரையும் பிரதமர் முஸ்தபா அல் காதிமி பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

சுகாதாரத்துறையில் நிலவும் ஊழல், போன்ற காரணங்களால் இத்துறை சீர்கேடு அடைந்துள்ளதாக பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பிரதமரின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள பொதுமக்கள், ஈராக்கில் தொடர்ந்த நீண்ட உள்நாட்டு போர், நிர்வாக சீர்கேடு போன்றவையால் சுகாதாரத்துறை கட்டமைப்பு சீர்குலைந்துள்ளதாக தெரிவித்தனர்.

அதனை சரிசெய்ய ஊழலற்ற நல்ல நிர்வாகம் வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Link Source: https://bit.ly/32RzFLo