Breaking News

சாலமன் தீவுகளில் ஒரு கடற்படையை நிறுவி ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தவும் மற்றும் அதனுடைய இயக்கத் திறனை கட்டுப்படுத்த சீனா விரும்பலாம் என பிரதமர் பார்நாபி ஜோயிஸ் தெரிவித்துள்ளார்.

Prime Minister Barnaby Joyce has said China may want to threaten Australia by setting up a navy in the Solomon Islands and restricting its mobility.

பசிபிக் கடற்பரப்பில் அமைந்துள்ள சாலமன் தீவுகள் நாட்டுக்கும் சீனாவுக்கு இடையில் ராணுவ ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறி வலைதளங்களில் சில ஆவணங்கள் வெளியாகின. அதனுடைய உண்மை தன்மை குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை.

ஆனால் இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஆஸ்திரேலிய அரசியலில் புயல் வீச தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவை அச்சுறுத்துவதற்காகவே சீனா, சாலமன் தீவுகளுடன் ராணுவ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Prime Minister Barnaby Joyce has said China may want to threaten Australia by setting up a navy in the Solomon Islands and restricting its mobility..எனினும் ஆஸ்திரேலியாவின் இந்த குற்றச்சாட்டுக்கு சாலன் தீவுகளின் எதிர் கட்சித் தலைவர் மேத்யூ வாலே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இவ்விவகாரம் தொடர்பாக கடந்தாண்டே ஆஸ்திரேலிய அரசாங்கத்தை கடுமையாக சாடிப் பேசியதாக அவர் கூறினார். இதையடுத்து பேசிய ஆஸ்திரேலிய துணை பிரதமர் பார்நாபி ஜோயிஸ், எதையும் தெரிந்துகொள்ளாமல் ஆஸ்திரேலிய நாடு இவ்விவகாரம் குறித்து பேசி வருவதாக சாலமன் தீவு நாடு கூறுவது வேடிக்கையாக உள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரதமர், நாட்டின் தேசிய பாதுகாப்புத் துறை ஆகியவை முட்டாள்கள் இல்லை என்று கடும் காட்டமாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ராணுவ ஒப்பந்தம் குறித்து சீனா மற்றும் சாலமன் தீவுகள் ஆலோசனை நடத்திருப்பது கருத்தில்கொள்ள வேண்டியதாக உள்ளது. இதை சீனாவின் தூண்டுதலாகவே பார்க்க வேண்டியுள்ளது என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் கூறினார்.

Link Source: https://ab.co/3LenXia