Breaking News

விக்டோரியாவில் முடக்கநிலை காலத்திலும் குறையாத தொற்று பாதிப்பு : ஊரடங்கு நீட்டிப்புக்கு தயாராகுமாறு மக்களுக்கு ப்ரீமியர் Daniel Andrews அறிவுறுத்தல்

Prevalent Daniel Andrews advice people to prepare for curfew extension

விக்டோரியாவில் டெல்டா வகை வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்கு முடக்க நிலை அமலில் உள்ளது. அது செப்டம்பர் 2-ம் தேதியோடு முடிவுக்கு வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில் விக்டோரியாவில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு இருப்பதாகவும், ஊரடங்கு நீட்டிப்பு க்கு தயாராகுமாறு விக்டோரிய மக்களை ப்ரீமியர் Daniel Andrews கேட்டுக்கொண்டுள்ளார்.

Prevalent Daniel Andrews advice people to prepare for curfew extension.ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 90 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் இது அடுத்த வாரத்தில் ஒருநாள் பாதிப்பு 100 -ஐ கடக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஒருநாள் பாதிப்பு 100 தொட்டிருக்கும் நிலையில் ஏராளமான தோற்று பாதித்தவர்கள் சமூக பரவலுக்கு காரணமாக இருந்திருக்கிறார்கள் என்றும், அப்படியான சூழலில் முடக்க நிலையை அகற்றுவது எந்த விதத்திலும் மக்களுக்கான தீர்வாக இருக்காது என்று ப்ரீமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.

தலைமை சுகாதார அதிகாரியிடம் இருந்து வரும் ஆலோசனையின் பேரில் முடக்க நிலையில் தளர்வுகள் கொண்டுவருவது குறித்தும், பாதிப்பின் அடிப்படையில் நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று ப்ரீமியர் கூறியுள்ளார்.

Prevalent Daniel Andrews advice people to prepare for curfew extension,.இருபதிலிருந்து 80% மக்கள் முழுமையாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட பின்னரே மாகாணங்களில் எல்லையை திறக்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், தற்போது எல்லைகளை திறந்ததே இதுபோன்ற பிரச்சனைகளுக்கு காரணம் என்றும் இனி வரும் காலங்களில் கொண்டு வரப் போகும் கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் கடுமையானதாக இருக்கும் என்றும் ப்ரீமியர் Daniel Andrews என்று தெரிவித்துள்ளார்.

தேசிய ஒதுக்கீட்டு திட்டத்தின் கீழ் விக்டோரியா மாகாணத்திற்கு தேவையான தடுப்பூசிகளை உடனடியாக பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் கூடுதலாக இருக்கும் பட்சத்தில் அவற்றையும் வழங்கலாம் என்றும் மத்திய அரசுக்கு Daniel Andrews கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்டா வகை வைரஸ் பாதிப்பு மிக வேகமாக இருக்கும் நிலையில் அடுத்து வரும் நாட்களில் அதன் தீவிரம் அதிகரிக்கக்கூடும் என்றும் அதற்கேற்றவாறு தடுப்பூசி போடும் வேகத்தையும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தலைமை சுகாதார அதிகாரி கூறியுள்ளார் அவரது ஆலோசனைகளை பெற்று அதன் அடிப்படையில் தடுப்பூசி மற்றும் உடல் நிலை தொடர்பான உரிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அதே நேரத்தில் தடுப்பூசி விவகாரத்தில் கவனம் செலுத்துவதே நாம் வைரஸ் பாதிப்பு, முடக்க நிலை உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதற்கு ஒரே தீர்வு என்றும் பிரீமியர் Daniel Andrews தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3kA4nBl