Breaking News

அமெரிக்காவில் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அதிபர் ஜோ பைடனின் உத்தரவு : தற்காலிக தடை விதித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆணை

President Joe Biden orders compulsory vaccination of employees in the United States. Court of Appeal orders temporary injunction

அமெரிக்காவில் பெரு நிறுவனங்களின் ஊழியர்கள் 2002 ஜனவரி 4 ஆம் தேதிக்குள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டிருந்தார். ஒரு நிறுவனத்தில் குறைந்தது 100 ஊழியர்கள் ஆவது தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் வார அடிப்படையில் அவர்களுக்கு கோவிட் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபரின் உத்தரவு அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், கட்டாய தடுப்பூசி உத்தரவு சட்ட ரீதியாக சிக்கல்களை கொண்டிருப்பதாகவும் பல்வேறு ஊழியர் அமைப்புகள் நீதிமன்றத்தை நாடின.

குடியரசு கட்சியின் செல்வாக்கு நிறைந்த 5 மாநிலங்கள் மற்றும் ஊழியர் அமைப்புகள் சில தனியார் நிறுவனங்கள் ஆகியவை நீதிமன்றத்தை நாடி உள்ள நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

President Joe Biden orders compulsory vaccination of employees in the United States.. Court of Appeal orders temporary injunctionஅமெரிக்காவில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் அதிபர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடி இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை அதிபருக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அது தடுப்பூசி போடும் நடவடிக்கையில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் இதுவரை 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருப்பதாகவும் நாளொன்றுக்கு சராசரியாக 1,100 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து வருவதாகவும் அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதிபர் உத்தரவு பிறப்பித்த இரண்டு நாட்களுக்குள் நீதிமன்றம் தடை விதித்திருப்பது தடுப்பூசி நடவடிக்கையில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவில் 84.2 மில்லியன் ஊழியர்கள் மற்றும் 1.9 மில்லியன் தனியார் நிறுவன ஊழியர்கள் அரசு பிறப்பித்த உத்தரவிற்கு உள்ளாக வருவதாகவும் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் அமைப்பான OSHA தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தற்காலிக தடை விதித்து விளக்கம் கேட்டு அரசுக்கு நீதிமன்றம் இரண்டு பக்க உத்தரவை அனுப்பியுள்ளது. திங்களன்று மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்கும் பட்சத்தில் இறுதி தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Link Source: https://bit.ly/3wpglD8