ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஒரேநாளில் 746 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அன்று மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,151-ஆக உள்ளது.
இதுகுறித்து பேசிய சுகாதாரத்துறை அதிகாரி கெர்ரி சாண்ட், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை மேலும் அதிகரிக்கும் என்பதே உண்மை. பொதுமக்களுக்கு சிறியளவில் அறிகுறிகள் தென்பட்டால், தயவுசெய்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். அதை தொடர்ந்து பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் டாமினிக் பெர்ரோடெட், டெல்டா வேரியண்ட் பாதிப்புகளைக் காட்டிலும் தற்போதைய சூழலில் கொரோனா தொற்று மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. எனினும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் சுகாதார கட்டமைப்புகள் வலிமை மிகுந்ததாகவே உள்ளன. மாநில நலன் கருதி இந்த அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Link Source: https://bit.ly/3mNMmBq