Breaking News

மேற்கு ஆஸ்திரேலியாவில் எல்லைகள் திறப்பு தேதி ஒத்திவைக்கப்பட்ட விவகாரம் : சமூக பரவல் ஏற்கனவே தொடங்கி விட்டதால் எல்லைகளை மூடுவதால் பலன் இல்லை என தொற்றுநோயியல் நிபுணர்கள் விளக்கம்

Postponement of Boundary Opening in Western Australia

மேற்கு ஆஸ்திரேலியாவில் டெல்டா மற்றும் மைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அங்கு பிப்ரவரி 5ஆம் தேதி திறக்கப்படுவது ஆக இருந்த மாகாண எல்லைகள் திறக்கப்படாது என்றும், அடுத்த மாதத்தில் தலைமை சுகாதார அதிகாரியின் ஆலோசனையின் அடிப்படையில் அறைகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றும் ப்ரீமியர் Mark McGowan தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்றும், எல்லைகள் திறப்பதற்காக 80 முதல் 90 சதவீதம் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கும் நிலை உருவாக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இதனிடையே பிரீமியர் தெரிவித்துள்ள கருத்தின் அடிப்படையில் ஏற்கனவே சமூக பரவல் தொடங்கிவிட்ட நிலையில் நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சதவிகிதம் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதாகவும் தற்போது எல்லைகளை மூடி வைப்பதால் எந்த பலனும் இல்லை என்றும் தொற்றுநோயியல் நிபுணர்
Catherine Bennett கூறியுள்ளார். ஒமைக்ரான் தொற்றுப்பரவல் தான் மேற்கு ஆஸ்திரேலிய எல்லைகளை எப்போது திறக்க வேண்டும் என முடிவு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Postponement of Boundary Opening in Western Australia16 வயதுக்கு மேற்பட்டவர்களில் 27 சதவீதம் பேர் மட்டுமே தங்களது மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாகவும் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி அவர்களின் எண்ணிக்கை 80 முதல் 90 சதவீதம் இருப்பதாகவும் பிரீமியர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் அதிகரிக்கப்பட்டு இரண்டு செலுத்தி அவர்களின் எண்ணிக்கை 98 சதவீதமாக மாற்றப்படும் என்றும் எல்லைகள் திறப்புக்குள்ளாக இந்த நடவடிக்கை உறுதி செய்யப்படும் என்றும் Mark McGowan நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதல் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து இருப்பதாகவும், அதே நேரத்தில் இரண்டாவது தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10 சதவீதம் வரை மட்டுமே இருக்கும் என்றும் டாக்டர் Catherine Bennett தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தொற்றுப் பரவலின் விகிதம் என்பது சராசரியாக சமூக பரவல் மூலமாக குறைவாகவே இருப்பதாகவும் இந்த எண்ணிக்கையை தொடரும் பட்சத்தில் பெருமளவிலான பாதிப்புகளை தவிர்க்க முடியும் என்றும் தொற்று நோயியல் நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது டோஸ் மற்றும் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத 20 முதல் 39 வயது வரையிலான நபர்களையே ஒமைக்ரான் தொற்று அதிகம் பாதிப்பதாகவும், இது மேற்கு ஆஸ்திரேலியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் இதே நிலை நீடிப்பதால் டாக்டர் Catherine Bennett தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மற்ற மாகாணங்களை ஒப்பிடும்போது கடந்த அலைகளில் பாதிக்கப்பட்ட அளவுக்கு மிகப் பெரும் பாதிப்பு இல்லை என்றும் அதே நேரத்தில் தோற்றுப் பறவையின் வேகம் கடுமையாக அதிகரித்து வருவதாகவும் இதனை தடுப்பதற்கு தடுப்பூசி ஒன்றே நமக்கு வழி என்றும் Catherine Bennett குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட சில மாகாணங்களை போல தொற்று பரவல் விகிதத்தின் அடிப்படையில் மருத்துவமனையில் அனுமதி பவர்களின் எண்ணிக்கை மேற்கு ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கவில்லை என்றும் அது மிகப்பெரும் நன்மை என்றும் Catherine Bennett கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/33SDbsJ