Breaking News

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை அரசியல் கட்சியினர் நேரில் ஆய்வு செய்து ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நேற்று முன் தினம் நடந்தது. தமிழகம் முழுவதும் 88 ஆயிரத்து 938 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 75 மையங்களில் மே 2ம் தேதி எண்ணப்பட உள்ளன. வாக்குச்சாவடிகளில் இருந்து பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன அந்த அறையின் உள்ளே யும் வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் என்றழைக்கப்படும் அறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.

Political parties are inspecting the center where the voting machines are kept and ensuring strong room security 1வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படையினர் மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆயுதப்படை போலீசாரும் வாக்கு எண்ணும் மையத்தில் நுழைவாயிலில் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது ஒவ்வொரு மையத்திலும் சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை 24 மணி நேரமும் பார்க்கும் வகையில் எல்இடி திறக்கப்பட்டுள்ளது வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அந்தந்த பகுதி காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கட்சிகளின் அதிகாரப்பூர்வ ஏஜென்ட்டுகள் மற்றும் வேட்பாளர்கள் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

குறைந்தபட்சம் ஒரு வாக்கு எண்ணும் மையத்தில் தினமும் ஐந்து முறையாவது வெவ்வேறு காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என்றும் சாகும் வரை போட்டியில் சேதமடையாமல் உள்ளதா, கண்காணிப்பு கேமராக்கள் சரியாக செயல்படுகிறதா, பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள போலீசார் தங்களது பணிகளைச் சரியாகச் செய்கிறார்களா, பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதா என்பதை காவல்துறை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும் என்றும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.