Breaking News

வாக்காளர்களை கவர, சமூக வலைத்தள விளம்பரங்களுக்கு அரசியல் கட்சிகள் பல மில்லியன் டாலர்களை செலவழித்து வருகின்றன.

Political parties are spending millions of dollars on social media ads to impress voters..

மத்திய தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக சமூக வலைத்தளங்களில் விளம்பரங்களை மேற்கொள்ள அண்மைகாலமாக அரசியல் கட்சிகள் பெரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். கடந்த ஒரு மாதம் மட்டும் சமூகவலைத்தள விளம்பரங்களுக்காக அரசியல் கட்சியினர் சுமார் 6 மில்லியன் டாலர் நிதியை செலவழித்திருப்பது தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் சராசரியாக 24 செண்ட்களை அரசியல் கட்சிகள் செலவழித்துள்ளன.

மேலும் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றும் என்று கருதப்படும் பிராந்தியங்களை மையப்படுத்தி விளம்பரங்களின் எண்ணிக்கையும் அரசியல் கட்சிகளால் அதிகரிக்கப்படுகிறது.

Political parties are spending millions of dollars on social media ads to impress voters.குறிப்பாக மேற்கு ஆஸ்திரேலியாவில் சமூக வலைத்தள விளம்பரங்களுக்கு மற்ற பிராந்தியங்களை காட்டிலும் 15% கூடுதலாக அரசியல் கட்சிகள் செலவழிக்கின்றன. லேபர் கட்சி சமூக வலைத்தள பக்கங்களை விளம்பரப்படுத்தவும், லிப்ரல் கட்சி வேட்பாளர்களை பிரபலப்படுத்தவும் கவனம் செலுத்துகின்றன. இது போன்ற விளம்பரங்களால் அரசியல் கட்சிகளின் பக்கங்களுக்கும், வேட்பாளர்களுக்கும் அதிக லைக்குகளும் ஷேர்களும் கிடைக்கின்றன. இது வேட்பாளர்களை விளம்பரப்படுத்த உதவும் என்றும் அக்கட்சிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மேலும் தேர்தலுக்கு முந்தைய 4 நாட்கள், தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் விளம்பரப்படுத்த தடை விதிக்கப்படும். ஆனால் சமூக வலைத்தள பக்கங்களில் அது போன்ற விளம்பரங்களுக்கு தடை இல்லை என்பதாலும், அரசியல் கட்சியினர் சமூக வலைத்தள விளம்பரங்களை அதிகம் விரும்புகின்றனர். வழக்கமான தொலைக்காட்சி செய்திகளை பார்க்கும் நடைமுறையில் இருந்து மக்கள் தற்போது மாறி வருகின்றனர். பெரும்பாலும் செல்போன்களிலும் சமூக வலைத்தள பக்கங்களிலும் மக்கள் அன்றாட நிகழ்வுகளை தெரிந்துக்கொள்வதால், சமூக வலைத்தளங்களின் விளம்பரம் தங்களுக்கு பயனளிக்கும் என்ற நம்பிக்கையுடன் அரசியல் கட்சியினர் பல பில்லியன் டாலர்களை செலவிட்டு வருகின்றனர்.