மத்திய ஆஸ்திரேலியாவின் தொலைதூர பகுதியான Yuendumu வில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக சென்ற காவலர் Zachary Rolfe, அங்கு நடைபெற்ற மோதலில் துப்பாக்கியால் சுட்டார். இதில் 19 வயது பழங்குடியின இளைஞரான Kumanjayi Walker உயிரிழந்தார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், காவல் அதிகாரியான Zachary Rolfe குற்றமற்றவர் என்று காவல்துறை தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்த ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
காவல்துறை குழுக்களுடன் சென்ற காவல் அதிகாரி Zachary Rolfe வீடு ஒன்றில் சென்று பழங்குடியின இளைஞரை கைது செய்ய முற்பட்ட நிலையில் அங்கிருந்த மருத்துவ கத்தரிக்கோலை எடுத்து காவரின் தோள்பட்டையில் பலமாக குத்தியுள்ளார். இதனை அடுத்த காவலர்களை தாக்கி விட்டு அங்கிருந்து அவர் தப்பிச் செல்ல முயன்ற போது பாதுகாப்பு காரணங்களுக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அதில் இளைஞர் உயிரிழந்து விட்டதாகவும் வழக்கறிஞர்கள் ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர்.
இந்த விவாகரத்தில் சம்பவ இடத்தில் இருந்த அனைத்து காவலர்களும் சாட்சியமாக சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில் இது முற்றிலும் பாதுகாப்பு நோக்கில் நடத்தப்பட்டது என்பது டிபன்ஸ் தரப்பு வழக்கறிஞர் David Edwardson வலுவாக முன்வைத்தார்.
சம்பவ நேரத்தில் காவல்துறை அதிகாரியாக எப்படி செயல்பட வேண்டுமோ, அதன்படி உரிய முறையில் அவர் நடந்து கொண்டுள்ளதாகவும் இதில் கொலைக்குற்றம் நோக்கம் அல்ல என்றும் உச்சநீதிமன்றத்தில் David Edwardson தெரிவித்தார்.
அதேநேரத்தில் எதிர்த்தரப்பு வழக்கறிஞர், கைது நடவடிக்கைக்காக முன்னதாக போடப்பட்ட திட்டம் குறிப்பிட்ட காவல்துறை குழுவால் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதாக நீதிமன்றத்தில் தங்களது தரப்பு வாதத்தை முன்வைத்தார்.
ஆனால் காவல்துறை தரப்பு வழக்கறிஞர் இதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட பழங்குடியின இளைஞரின் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட நடவடிக்கைகளை முன்வைத்து இது போன்ற கூரிய ஆயுதத்தால் தாக்கும்போது எடுக்கப்படவேண்டிய நடவடிக்கையை காவல்துறை அதிகாரி சரியான முறையில் எடுத்திருப்பதாகவும் எதிர்பாராத சம்பவங்கள் நிகழும்போது திட்டத்தின் அடிப்படையிலேயே கைது நடவடிக்கையை மேற்கொள்வது என்பது இயலாத ஒன்று என்றும் David Edwardson கூறியுள்ளார்.
மேலும் சில சாட்சியங்கள் விசாரிக்கப்பட உள்ள நிலையில் அதன் பின்னர் இறுதித் தீர்ப்பு வெளியாகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Link Source: https://ab.co/3rBPEuh