Breaking News

சமூகக் காரணங்களுக்காக 26 வயதான இளைஞரை தேடி வரும் போலீஸ்..!!

Police search for 26-year-old youth for social reasons.

வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவின் தென் பிராந்தியப் பகுதியிலுள்ள ஸ்டிர்லிங் ரேஞ்ச் தேசிய பூங்காவிற்குள் மாயமானதாக நம்பப்படும் இளைஞரை தேடி வருவதில் தங்களுக்கு சமூக காரணங்கள் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Police search for 26-year-old youth for social reasons,கடந்த சனிக்கிழமை காலையில் டூல்பர்னப் மலையின் கார் பார்க்கிங் பகுதியில், 26 வயதான முகமத் ஃபெரிடியன்ஷா என்பவருடைய கார் கேட்பாரற்று இருந்தது. அதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த இளைஞர் மாயமானது தெரியவந்தது. உடனடியாக உள்ளூர் போலீசார் மற்றும் ஆவசர மீட்புப் பணிகள் குழுவினர் தேடுதல் பணியை முழு வீச்சில் தொடங்கினார். மாநில அவசரகால சேவை வழங்கும் குழு மற்றும் வனப்பகுதி பாதுகாவலர்களும் இந்த தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கண்டுப்பிடிக்கப்பட்ட காரை முகமது ஃபெரிடியன்ஷா தான் ஓட்டி வந்தாரா என்பது தெரியவில்லை. எனினும் அவரை பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக 131 444 என்கிற எண்ணை தொடர்புகொண்டு தகவல் அளிக்கலாம் என வெஸ்டர் ஆஸ்திரேலியா போலீஸ் தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3K7wMuz