Breaking News

சிட்னி துறைமுகம் சரக்கு கப்பல்களுக்கு அடியிலுள்ள ஓட்டையில் போதைப் பொருட்கள் கொண்டுவரப்பட்டு ஆஸ்திரேலியாவுக்குள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Police say the drugs were being smuggled into Australia through a hole in the bottom of a Sydney port cargo ship.

சர்வதேசளவில் போதை பொருட்களுக்கு பெரிய சந்தையாக சிட்னி இருக்கிறது. அதனால் பல்வேறு நாடுகளில் இருந்து இங்கு போதைப் பொருட்கள் நூதன வழிகளில் கொண்டுவரப்பட்டு ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்படுவது அதிகரித்துள்ளது.

Police say the drugs were being smuggled into Australia through a hole in the bottom of a Sydney port cargo ship..சமீபத்தில் நியூ காஸ்டில் துறைமுகத்தில் சரக்கு கப்பலுக்கு அடியே ஸ்கூபா டிரைவர் செய்யும் நபரின் உயிரற்ற உடல் மிதந்து கொண்டிருந்தது. இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்து சோதனையிட்ட போது, சுமார் 10 மில்லியன் மதிப்பிலான கொக்கைன் ரக போதை பொருட்கள் சடலத்துடன் சேர்ந்து மிதப்பதை அவர்கள் கண்டறிந்தனர். அதையடுத்து கப்பலுக்கு அடியில் மறைத்து ஆஸ்திரேலியாவுக்குள் கொண்டுவரப்பட்டு, விற்பனை செய்யப்பட இருந்த போதை பொருளை சம்மந்தப்பட்ட நபர் எடுக்க முயற்சித்த போது உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. சர்வதேசளவில் போதை பொருட்கள் விற்பனை சந்தையில், சிட்னி முன்னணியில் உள்ளது.

அதனால் நகருக்குள் கொண்டுவந்து ஆஸ்திரேலியாவின் பல்வேறு இடங்களுக்கு விநியோகிக்கும் விதமாக நூதன வழியில் போதை பொருள் கொண்டுவரப்பட்டுள்ளதை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து சிட்னியிலுள்ள முக்கிய துறைமுகங்களில் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், சரக்கு கப்பல்கள்களும் பெருமளவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.