Breaking News

ஆஸ்திரேலியாவில் சிறுவர் சிறுமிகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களில் 158 பேரை கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர்களால் பாதிக்கப்பட்ட 51 குழந்தைகளை காவல்துறையினர் மீட்டனர்.

Police in Australia have rescued 51 children after 158 people were arrested for sexually abusing children.

சர்வதேசளவில் குழண்டைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதையடுத்து சர்வதேச காவல்துறையினர் இந்த விவகாரத்தில் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். கடந்த 2019-ம் ஆண்டு துவங்கப்பட்ட விசாரணையின் படி, ஆஸ்திரேலியாவிலும் சிறுவர் சிறுமிகள் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகி வருவது தெரியவந்தது.

Police in Australia have rescued 51 children after 158 people were arrested for sexually abusing children...அந்தாண்டில் மட்டும் சர்வதேசளவில் 1248 பாலியல் குற்ற வழக்குகள் குறித்து சர்வதேச போலீசார் விசாரணையை துவங்கினர். அதன்படி உலகளவில் 153 பாதிக்கப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் மொத்தம் 51 குழந்தைகள் மீட்கப்பட்டனர். ஆஸ்திரேலிய காவல்துறை மற்றும் ஆஸ்திரேலிய குழந்தைகள் நல காப்பகம் இணைந்து சர்வதேச போலீசாருக்கு இவ்விவகாரத்தில் உதவ தொடங்கினர். அதன்படி குற்றஞ்சாட்டப்பட்ட மொத்தம் 117 வழக்கில் தொடர்புடைய 117 பேரை முதற்கட்டமாக ஆஸ்திரேலிய காவல்துறை கைது செய்துள்ளது.

Police in Australia have rescued 51 children after 158 people were arrested for sexually abusing children..குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியவர்கள், குழந்தைகளை வைத்து ஆபாச படங்களை தயாரித்தவர்கள் உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை மீதான குற்றத்தை உறுதி செய்வதற்கான ஆதாரங்களை காவல்துறையினர் சேகரித்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய விக்டோரிய மாநில காவல்துறை உயர் அதிகாரி ஜேய்ன் வெல்ஸ், பெற்றோர்கள் குழந்தைகளிடம் நல்ல நட்புடன் பழக வேண்டும். அவர்கள் மீது அதீத அக்கறை காட்டும் சூழலில் நாம் வாழ்கிறோம். தினசரி குழந்தைகளிடம் பெற்றோர்களுடன் உரையாடுவதை ஏற்படுத்திக் கொண்டால், குற்றங்கள் நடைபெறுவதை தவிர்க்கலாம் என்று கூறினார்.

Link Source: https://ab.co/3KvGfLB