Breaking News

காரை திருடிக்கொண்டு சிட்னி துறைமுகப் பாலத்தில் விபத்து ஏற்படுத்திய இளைஞர் மீது பொதுமக்கள் உதவியுடன் குற்றத்தை உறுதி செய்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

கடந்த திங்கட்கிழமை அன்று சிட்னி துறைமுகப் பாலத்தில் வேகமாக வந்த டொயோட்டா க்ளூகர் எஸ்யூவி கார், டிராஃபிக்கில் நிற்காமல் முன்னே சென்ற மற்றோரு வேன் மீது மோதி நின்றது. இதனால் ஒட்டுமொத்த பாலத்தில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Police have registered a case against a young man who stole a car and caused an accident on Sydney Harbor Bridge with the help of the public..இந்த காரை ஓட்டி வந்த 19 வயது இளைஞரான கிறிஸ்டோபர் வால்கர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட சிட்னி நகர போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக விசாரித்த போது பல திடுக்கிடும் உண்மைகள் காவல்துறைக்கு தெரியவந்தது. அதாவது, விபத்தில் சிக்கிய டொயோட்டா க்ளூகர் காரை இளைஞர் கிறிஸ்டோபர் திருடி வந்தது தெரியவந்தது. அதையடுத்து விபத்து வழக்கு திருட்டு வழக்காக பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சிட்னி துறைமுகப் பாலத்தில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் விபத்து ஏற்படுத்தியது கிறிஸ்டோபர் வால்கர் தான் என்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் சம்பவம் நடந்த போது நிகழ்விடத்தில் இருந்த பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கிறிஸ்டோபர் வால்கரை அடையாளம் காட்டியுள்ளனர்.

இதையடுத்து காவல்துறையினர் கிறிஸ்டோபரை கைது செய்துள்ளனர். அவருக்கு தலை மற்றும் இடுப்பு பகுதிகளிலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வழக்கு தொடர்பான விசாரணை மத்திய புறநகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Link Source: https://ab.co/3tExMyw