Breaking News

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தந்தையின் மருத்துவச் செலவுக்கு பணம் வேண்டும் என்று கூறி 19 பேரிடம் 792,000 டாலர்களை வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Police have arrested a doctor who allegedly bought $ 792,000 from 19 people to pay for the medical expenses of his cancer-stricken father.

வார்னாம்ப்புல் என்கிற பகுதியைச் சேர்ந்த மருத்துவர் அப்ரஹாம் ஸ்டெஃபென்சன் (50). இவருடைய தந்தை தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு முதல் டிசம்பர் 2020-ம் ஆண்டு வரை தனக்கு தெரிந்த 19 பேரிடம் தந்தைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறி கடன் வாங்கியுள்ளார்.

ஆனால் உரிய நேரத்தில் அவர் பணத்தை திருப்பி தரவில்லை. இதையடுத்து மருத்துவர் அப்ரஹாமுக்கு பணம் கொடுத்து உதவியவர்களில் ஒருவர், கடனை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அதை தராமல் பல்வேறு காரணங்களை கூறி இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் அப்ரஹாம் மீது காவல்துறையிடம் புகார் அளித்தார்.

Police have arrested a doctor who allegedly bought $ 792,000 from 19 people to pay for the medical expenses of his cancer-stricken father..அவர்கள் புகாரை ஏற்றுக்கொண்டு மருத்துவர் அப்ரஹாமை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது, தந்தையின் புற்றுநோயை காரணம் காட்டி 19 பேரிடம் அவர் கடன் வாங்கி இருப்பது தெரியவந்தது. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவருடைய தந்தை தன்னிடம் உள்ள சேமிப்பை வைத்து மருத்துவச் செலவை சமாளித்து வருகிறார். அதன்மூலம் மோசடி செய்து 19 பேரிடமும் அப்ரஹாம் கடன் வாங்கியது தெரியவந்தது. மேலும் அவர் வாங்கிய பணத்தை சூதாட்டத்தில் கட்டி இழந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த்ய வார்னம்ப்புல் மாவட்ட நீதிமன்றம், அப்ரஹாம் மீதான குற்றத்தை உறுதி செய்தது. விரைவில் அவர் மீதான தண்டனை விவரங்களை நீதிமன்றம் வெளியிடவுள்ளது.