Breaking News

குயின்லாந்து மாகாணத்தில் விதியை மீறி தனது மகளை நியூ சவுத் வேல்ஸ் எல்லை தாண்டி அழைத்துச் சென்றதாக புகார் : நீதிமன்றத்தில் ஆஜராக போலீஸ் கான்ஸ்டபிளுக்கு சம்மன்

டெல்டா வகை வைரஸ் பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான மாகாணங்களில் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்காக மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில் காவல்துறை அதிகாரி ஒருவர் தனது 20 வயது மகளை குயின்ஸ்லாந்தில் இருந்து நியூ சவுத் வேல்ஸ்க்கு சட்டவிரோதமாக எல்லை தாண்டி அழைத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.

Police constable summoned to appear in court for allegedly taking his daughter across the border into New South Walesஇது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மூத்த கான்ஸ்டபிள் வழக்கு விசாரணைக்காக அக்டோபர் 18 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. செப்டம்பர் 15-ஆம் தேதி வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது சட்டவிரோதமாக தனது மகளை எல்லைதாண்டி அழைத்துச் சென்றதாக கான்ஸ்டபிள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் கான்ஸ்டபிள், அவரது மகளின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளன.

அவரது மகளுக்கு 4 ஆயிரத்து 135 டாலர் அபராதம் விதிக்கப் பட்டுள்ள நிலையில் அவர் தற்போது ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இந்நிலையில் காவல்துறை அதிகாரி மீண்டும் குயின்ஸ்லாந்து நுழைவதற்கான உரிய அலுவல் பூர்வமான அனுமதி கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.

Link Source: https://ab.co/2W6YSlc