Breaking News

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் வயதான இந்தியப் பெண்ணை அடிமையாக பயன்படுத்திய விவகாரம் : தம்பதியை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை

Police arrest and imprison elderly couple in Melbourne, Australia.

2007 ம் ஆண்டு குமுதினி கண்ணன், கந்தசாமி தம்பதியுடன் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட பெண்மணி மெல்போர்னில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அடிமையாக நடத்தப்பட்டு வந்துள்ளார்.

தம்பதியின் 3 குழந்தைகளை கண்காணித்து வந்த வயதான பெண்மணிக்கு உரிய ஊதியம் அளிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரது விசா அடுத்த மாதம் முடிவடையும் நிலையில் அவருக்கு உரிய மருத்துவ சேவை பெறுவதற்கான உதவிகளையும் தம்பத்திகள் செய்யவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் 2015 ம் ஆண்டு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்கையில் விவரம் தெரியவந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.Sepsis, நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட பெண்மணியை தற்போது மெல்போர்ன் நர்சங் ஹோமில் தங்க வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Police arrest and imprison elderly couple in Melbourne, Australiaகுமுதினி, கந்தசாமி தம்பதிக்கு மெல்போர்ன் Country நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதி்த்து தீர்ப்பளித்துள்ளது. மூன்று குழந்தைகளை பராமரித்துக் கொண்டு வீட்டில் வேலை பார்த்து வந்த பெண்மணிக்கு நாளொன்றுக்கு 3 டாலர் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டதாகவும், அவரின் மருத்துவ பரிசோதனையின் போது பற்கள் இல்லாமல் இருந்ததாக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

8 ஆண்டு சிறை தண்டனையில் குமுதினிக்கு 3 ஆண்டுகள் பிணையில் வர முடியாத தண்டனையும், கந்தசாமிக்கு 4 ஆண்டுகள் பிணையில் வர முடியாத தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

Link Source: https://bit.ly/3wXSeu6