Breaking News

காணாமல் போன 4 வயது சிறுமி கிளியோ ஸ்மித்தை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

Police are struggling to locate missing 4-year-old Cleo Smith.

மேற்கு ஆஸ்திரேலியாவின் கார்னோர்வன் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி கிளியே ஸ்மித், பிளோஹோல்ஸ் பகுதியில் கடந்த 16 ஆம் தேதி காணாமல் போனார். சிறுமி காணாமல் போய் 14 நாட்கள் கடந்துள்ள நிலையில், கிளியோ ஸ்மித்தை தேடும் பணி கடந்த தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எல்லி ஸ்மித், ஜேக் கிளிடன் தம்பதியினர் தங்கள் மகளை மீட்டுத்தரும்படியும் கண்ணீர் மல்க சமூக வலைத்தளங்களில் வீடியோ பகிர்ந்துள்ளனர்.

Police are struggling to locate missing 4-year-old Cleo Smith, சிறுமியை தேடும் பணியில் ஹெலிக்காப்டர்களும், ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேற்கு ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய தேடுதல் பணியாக இந்த பணி கருதப்படுகிறது. சிறுமியை தேடும் பணியில் சுமார் 100க்கும் அதிகமான காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும் சிறுமி கிளியோ ஸ்மித் குறித்த எந்த தகவலும் தற்போது வரை காவல்துறைக்கு கிடைக்கவில்லை.
சிறுமி குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு $1மில்லியன் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி இறுதியாக காணப்பட்ட புளோஹோல்ஸ் தங்கும் பகுதியில் புலனாய்வு நிபுணர்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிளியோ ஸ்மித் கடத்தப்பட்ட 14 நாட்களை கடந்த நிலையில், தற்போது தேடுதல் எல்லை விரிவு படுத்தப்பட்டுள்ளது.

கிளியோ ஸ்மித்தை தேடும் பணியில் அனைத்து விதமான ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் உறுதியளித்துள்ளார்.

Police are struggling to locate missing 4-year-old Cleo Smith.,.பிளோஹோல்ஸ் பகுதியில் இருந்து அதிகாலை 3:30 மணிக்கு வெளியேறிய கார் குறித்த தகவலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஆனால் அந்த கார் குறித்த எந்த சி சி டிவி காட்சிகளும் தற்போது வரை கிடைக்கவில்லை என்று கருதப்படுகிறது. மேலும் பிளோஹோல்ஸ் பகுதியில் அதிக அளவு வர்த்தக கட்டடங்கள் இல்லததாலும், சி சி டிவி காட்சிகள் கிடைப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எனவே அந்த குறிப்பிட்ட நேரத்தில் பிளோஹோல்ஸ் பகுதியில் பயணம் செய்த மக்கள் தங்கள் கார்களின் சி சிடிவி காட்சிகளை ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

Police are struggling to locate missing 4-year-old Cleo Smith,,,ஆனால் பிரதான சாலையில் இருந்து, ஏராளமான கிளைச்சாலைகளும் பிரிந்து செல்வதால் சிறுமியை கடத்திய நபர், மற்ற சாலைகளை பயன்படுத்தியிருக்க கூடும் என்ற சந்தேகமும் காவல்துறைக்கு உள்ளது. சிறுமி காணாமல் போன வழக்கின் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள Rod Wilde மீண்டும் பெர்த் சென்றுள்ளார். தேசிய அளவில் இந்த சிறுமியை தேடும் பணி விரிவிபடுத்தப்படவுள்ளது.

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஏராளமான அழைப்புகள் வந்தாலும், அனைத்தும் தவறான அழைப்புகளாகவே காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். சிறுமி காணாமல் போன வழக்கு காவல்துறைக்கு சவாலாக இருந்தாலும், கி ளியோ ஸ்மித்தை கண்டறியும் முயற்சியில் சிறப்பு தனிப்படை தீவிரம் காட்டி வருகிறது.

Link Source: shorturl.at/zJY68