Breaking News

40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி போடலாம் என்ற பிரதமரின் அறிவிப்பு : இதுவரை ஆஸ்திரேலிய நோய்தடுப்புக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அனுமதி தரவில்லை என தகவல்

ஆஸ்திரேலியாவில் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அஸ்ட்ரா செனகா தடுப்பூசி போடலாம் என்ற அரசின் அறிவிப்பில், காமன்வெல்த் நிபுணர்கள் குழுவின் தலைவர் நீரை ஊற்றியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் புதிய வகை வைரஸ் ஆன டெல்டா வகை வைரஸ் அதிக அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. இதனையடுத்து பல்வேறு நகரங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் தடுப்பூசி நடவடிக்கையை தீவிரப் படுத்தப்பட வேண்டும் என்ற அழுத்தம் காரணமாக 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அஸ்ட்ராசெனகா தடுப்பூசி செலுத்தலாம் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்தார்.

PM announces Astrazeneca vaccine for people under 40. Australian Immunization Advisory Council not yet approved.ஆனால் இந்த அறிவிப்புக்கு ஆஸ்திரேலிய நோய்தடுப்புக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பேசிய அக்குழுவின் துணை தலைவர் Christopher Blyth, தங்களின் ஆலோசனைப்படி 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி மட்டுமே என்றும் அஅஸ்ட்ராசெனகா தடுப்பூசி இன்னும் அறிவுறுத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இரத்தம் உறைதல் பிரச்சினை தொடர்பான எந்த ஆய்வுகளும் இன்னும் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நடத்தப்படவில்லை என்றும், அதே நேரத்தில் கடந்த வாரத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் இரத்தம் உறைதல் பிரச்சனை காரணமாக உயிரிழந்து விட்டதாகவும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

PM announces Astrazeneca vaccine for people under 40. Australian Immunization Advisory Council not yet approved,.இது தொடர்பான உரிய ஆய்வுகளை நடத்தி அவசரம் காட்டாமல் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும்
ஆஸ்திரேலிய நோய் தடுப்புக்கான தொழில்நுட்ப ஆலோசனை குழு தெரிவித்துள்ளது. இதனிடையே ஆஸ்திரேலியாவிலேயே தயாரிக்கப்படும் அஸ்ட்ரா செனகா தடுப்பூசி அதிக அளவில் பயன்பாட்டுக்கு வருவதாகவும் ஆனால் ஃபைசர் தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3qBNx7J