Breaking News

ஆஸ்திரேலியாவில் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக சர்வதேச பயணிகளை அனுமதிக்க திட்டம் : பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு குறையும் பட்சத்தில் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக சர்வதேச பயணிகளை அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். ஒமைக்ரான் தொற்று பரவல் நாடு முழுவதும் பரவலாக இருந்து வரக்கூடிய நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் சர்வதேச பயணிகளை அனுமதிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதாகவும் பெரும்பாலான மாகாணங்களில் இன்னும் சர்வதேச எல்லைகளை திறக்க முடியாத சூழல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2021 இறுதியில் சர்வதேச எல்லைகள் திறக்கப்பட்டது நாட்டின் குடிமக்கள், குடியுரிமை பெற்ற நபர்கள் மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் ஆகியோருக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. அதே நேரத்தில் தற்போது எல்லைகளை திறப்பதற்கான குறிப்பிட்ட தேதி எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்றும், தொற்றுப் பரவல் நிலையை பொறுத்தே எல்லைத் திறப்பு விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.

எல்லைகள் திறக்கும் விவகாரத்தில் நீண்ட நாட்கள் ஆகும் என தான் நினைக்கவில்லை என்றும், அதே நேரத்தில் மாகாணங்களில் இருந்து பெறப்படும் அறிக்கைகள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவு மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். அதே நேரம் கண்டிப்பாக ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக அவை நடக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Plan to allow international travelers in Australia ahead of Easter. Prime Minister Scott Morrison announcement.இந்நிலையில் சர்வதேச மாணவர்கள் மற்றும் அவர்களுக்கான விசா கட்டணத்தை ஆஸ்திரேலிய அரசு திரும்பச் செலுத்துவதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது வருகை தர விசா கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. சுகாதார நிபுணர்களின் கருத்துக்களின் படி தற்போது பரவலாக மைக்ரான் தோற்று உச்சநிலையை எட்டி இருப்பதாகவும் அது விரைவில் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது அதே நேரத்தில் தொற்று பாதித்து உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருவதால் இது விரைவில் குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நேரத்தில் அனைத்து மாகாணங்கள் சர்வதேச எல்லைகளை திறப்பதற்கான முடிவில் இருப்பவர்கள் தடுப்பூசி விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தகுதி வாய்ந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருக்கும் பயணிகள் ஆஸ்திரேலியா வருகை தரும் பட்சத்தில் அவர்களுக்கான உரிய ஏற்பாடுகளை செய்வதற்கான திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் கூறியுள்ளார்.

Link Source: https://bit.ly/3AGFxqO