15 வயது முதல் 17 வயது வரையிலான இளம் பருவத்தினருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கான ஃபைசர் தடுப்பூசிக்கு பரிசோதனைக்கு பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய மருந்து தர கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை அமைப்பு இதற்கான அனுமதியை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் Greg Hunt தெரிவித்துள்ளார்.
Canberra வில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் Greg Hunt, ATAGI அதிகாரப்பூர்வ அனுமதி கடிதத்தை வழங்கிய பின்னர் விரைந்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதற்கு ஓரிரு வாரங்கள் காலஅவகாசம் ஆகும் என்றும் கூறியுள்ளார்.
ஒரே தரத்தில், ஒரே தடுப்பூசி அனைத்து பகுதிகளிலும் பரவலாக கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்றும், மருந்து தர கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை அமைப்பின் அறிவுறுத்தல்கள் கிடைத்த அடுத்த தினமே உரிய நடவடிக்கைகளை வழிகாட்டும் நெறிமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ள தயாராக இருப்பதாக Greg Hunt கூறியுள்ளார். அதே நேரத்தில் இதர வயதினர் காலதாமதமாக தடுப்பூசி எடுத்துக் கொண்டிருந்தால் அவர்கள் போதிய கால இடைவெளியில் பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளவும் சுகாதாரத் துறை அனுமதி வழங்கியுள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான போதிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றும் கருணை பரவலை தடுப்பதற்கான முக்கிய ஆயுதமாக தடுப்பூசி பார்க்கப்பட வேண்டும் என்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்.
பல்வேறு மாகாணங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு இது சரியான வழி என்றும் தலைமை சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
Link Source: https://bit.ly/3IKg9DB