Breaking News

40 வயதுக்கு உட்பட்ட ஆஸ்திரேலியர்களுக்கு பைசர், மாடெர்னா தடுப்பூசி : செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அதிகாரப்பூர்வ தகுதி கிடைக்கும் என அறிவிப்பு

Pfizer, Moderna vaccine for Australians under 40. Official qualification announced in September or October

கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுவரும் தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மாடெர்னா, பைசர் ஆகிய தடுப்பூசிகள் செலுத்துவதற்கான அதிகாரப்பூர்வ தகுதி செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் கிடைத்துவிடும் என்று லெப்டினண்ட் ஜெனரல் John Frewen கூறியுள்ளார்.

40 வயதுக்குட்பட்ட பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் இன்னும் இரண்டு தடுப்பூசிகளும் தகுதி பெற்றவர்களாக இல்லை என்றும் அவர்கள் தங்களது பொது மருத்துவரை அணுகி தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கு தயாராக வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Pfizer, Moderna vaccine for Australians under 40. Official qualification announced in September or October.ஆஸ்திரேலியாவில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி போடுவதற்கு தேர்வு செய்து இருக்கும் நிலையில்,  அடுத்து வரக்கூடிய மாதங்களில் மாடெர்னா, பைசர் தடுப்பூசிகளின் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் 40 வயதுக்கு உட்பட்ட ஒருக்கு முழுவதுமாக இரண்டு தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் வேகம் எடுக்கும் என்றும் லெப்டினண்ட் ஜெனரல் John Frewen தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட அஸ்ட்ராசெனகா தடுப்பூசி, கடந்த வாரம் பிரதமர் ஸ்காட் மோரிசன் பரிந்துரையை அடுத்து 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், உட்பட்டவர்களுக்கும் மாடெர்னா மற்றும் பைசர் தடுப்பூசிகளை செலுத்தலாம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது லெப்டினன்ட் ஜெனரல் அறிவித்துள்ளார்.

Pfizer, Moderna vaccine for Australians under 40. Official qualification announced in September or October,.மாநிலங்களிடமும், தேசிய கேபினட் குழுவுடன் ஆலோசனை நடத்தாமல் பிரதமர் தன்னிச்சையாக இந்த முடிவை அறிவித்து விட்டதாக விவாதங்கள் எழுந்த நிலையில், தடுப்பூசி போடும் நடவடிக்கைகளில் குழப்பம் நிலவுவதாக கூறப்பட்டது. இனி வரும் மாதங்களில் மாடர்னா மற்றும் பைபர் தடுப்பூசிகளின் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும், அப்போது பெரும்பாலான இளைஞர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று உறுதி கூறுவதாகவும் லெப்டினண்ட் ஜெனரல் John Frewen தெரிவித்துள்ளார்.

40 மில்லியன் மாடெர்னா, 25 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் இதுவரை வாங்குவதற்கான ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், தடுப்பூசிகளை மொத்தமாக வாங்குவதற்கான கால நிர்ணயம் செய்யப் பட்டுள்ளதாகவும் ஆண்டின் இறுதி மூன்று மாதத்தில் பெருமளவு தடுப்பூசி வந்து சேரும் என்றும் கூறப்பட்டுள்ளது.  மேலும் மாகாண சுகாதார அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தடுப்பூசி நடவடிக்கைகளை வேகப் படுத்துவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் லெஃப்டினன்ட் ஜெனரல் கூறியுள்ளார்.

அதேநேரத்தில் முதியோர்களை பராமரிக்கும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தடுப்பூசி நடவடிக்கையில் அவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடுவதற்காக நடவடிக்கை அனைத்து மாகாணங்களிலும் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Link Source: shorturl.at/cmwAK