Breaking News

Perth Curtin பல்கலைக்கழகத்தில் திடீர் விபத்து !ஒருவர் பலி,இருவர் படுகாயம் !

Perth’s Curtin University-யில் கட்டுமானத்தில் இருந்த கண்ணாடி மேல்தளம் உடைந்து விழுந்ததில் 23 வயது ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்,இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.இந்த சம்பவம் அங்கு இருந்தவர்களை பேர் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சம்பவம் நடந்த அன்று சுமார் மதியம் 12:30 மணிக்கு,இரண்டு கட்டடத் தொழிலாளிகள் மேற்கூரையின் தளத்தில் அமர்ந்து வேலை செய்துகொண்டிருந்தனர்.திடீரென்று தளம் உடைந்து விட, இருவரும் 20 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்தனர். 23 வயது ஆண் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

மற்றொருவர் சிகிச்சைக்காக Royal Perth Hospital-க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சம்பவ இடத்தை பாதுகாப்பாக மாற்றி உடலை பத்திரமாக எடுத்து அவரது குடும்பாத்தாரிடம் ஒப்படைக்க காவல் துறை தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.

தளம் உடைந்ததற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என WA Police Commander Mike Bell உத்தரவிட்டு உள்ளார்.அந்த இடத்தில் இருந்த மற்ற தொழிலாளர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இடிபாடுகளில் சிக்கிய உடலை பாதுகாப்பாக எடுக்க பொறியாளர்களிடம் ஆலோசனை செய்யப்படும். அதன் பின் விசாரணை தொடங்கும் என்று காவல் துறை அறிவித்து உள்ளது.

இந்த கட்டுமானப் பணிகள் பல மாதங்களாக நடந்து வருவதாகவும், இந்த இடத்தில் உள்ள பிரச்சனைகளை பற்றி அறியாமல் இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்து உள்ளது.