தெற்கு ஆஸ்திரேலியாவிலுக்குள் வருபவர்களுக்கு கட்டாய பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்னும் உத்தரவை ரத்து செய்தார் முதல்வர் ஸ்டீவன் மார்ஷல்.
ஆஸ்திரேலியா முழுவதும் ஓமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதற்கான புதிய கட்டுப்பாடுகளை பல்வேறு மாகாணங்கள் அறிவித்து வருகின்றன. தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அம்மாநில முதலமைச்சர் ஸ்டீபன் மார்ஷல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு ஆஸ்திரேலியாவுக்குள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மக்கள் பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், வேற்று மாநிலங்களில் இருந்து தெற்கு ஆஸ்திரேலியாவுக்குள் வருபவர்கள் அவசியம் 73 மணி நேரத்திற்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்கிற அறிவிப்பு நடைமுறையில் இருந்தது. தற்போது அது விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. அறிகுறிள்ளவர்கள் மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என முதல்வர் ஸ்டீபன் மார்ஷல் கூறியுள்ளார்.
Link Source: https://bit.ly/3JlHwVE